ஜுலை மாதம் 26 ம் தேதி யெட்டி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். 29 ம் தேதி நம்பிக்கை வாக்கிலும் வெற்றி பெற்று விட்டார்.
ஆனால் இதுவரை அவரால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. ஆனால் தனியே, தன்னந்தனியே நான்கு அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தி விட்டாராம்.
ஏன் இந்த கால தாமதம்?
பாஜக எம்.எல்.ஏ க்கள் யாரும் அமைச்சராக விருப்பமில்லையா? அந்த அளவு பதவி ஆசை இல்லாத சன்னியாசிகளா அவர்கள்?
பாவம் மக்கள் ஆதரவிலா யெட்டி மீண்டும் முதல்வரானார்!
எத்தனை பணம் ! எத்தனை டீலிங!!, எவ்வளவு பேரம் !!!!
இதிலே கொஞ்சம் ஸ்லிப்பானாலும் முதல்வர் பதவி மீண்டும் அல்பாயுசில் முடிந்து விடுமல்லவா?
அதனால்தான் இப்படி சிங்கிள் மேன் ஆர்மி நடத்துகிறார் யெட்டி.
பிகு :
நாளை அமைச்சரவை அமைக்கப்போவதாய் செய்திகள் வருகிறது. அதற்குப் பிறகுதான் சுவாரஸ்யம் காத்திருக்கிறது
No comments:
Post a Comment