Thursday, August 29, 2019

இது இருக்கலாமா யுவர் ஆனர்?


பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு அர்பன் நக்ஸல் என்று வர்ணிக்கப்பட்டுள்ளவர்களிடம் ஒருவரான தோழர் கோன்ஸ்லேவ்ஸ் அவர்களிடம்

உலகத்தின் தலை சிறந்த இலக்கியம் என்று புகழப்படுகிற 

"போரும் அமைதியும்" 

நூலை ஏன் வைத்துள்ளீர்கள் 

என்று இந்த நூற்றாண்டின் மகத்தான கேள்வியைக் கேட்டுள்ள மரியாதைக்குரிய நீதியரசர் அவர்களே,

என்னிடம் உள்ள ஏராளமான நூல்களில்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை,
மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள்,
லெனினின் "அரசும் புரட்சியும்", "என்ன செய்ய வேண்டும்?"
ஸ்டாலினின் "தேசிய இனப் பிரச்சினை குறித்து"
பிடல் கேஸ்ட்ரோவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்?"
"சே-பிடல் புரட்சிகர நட்பு"
ஜூலியஸ் பூசிக்கின் "தூக்கு மேடைக் குறிப்புகள்"

ஆகிய நூல்களை ஏன் வைத்துள்ளாய் என்று நிச்சயமாய் கேள்வி கேட்பீர்கள் என்று தெரியும்.

கீழே உள்ள ஒரு நூலை வைத்துள்ளாய் என்றும் கேட்பீர்களா என்று சொல்லுங்கள்.



ஏனென்றால் அவை "போரும் அமைதியும்" எழுதிய லியோ டால்ஸ்டாய் எழுதிய சில கடிதங்களின் தொகுப்பு.

அதை விட முக்கியம்

இந்த நூலுக்கு முன்னுரை எழுதியவரைக் கண்டால் இன்றைய ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. 

ஆமாம். முன்னுரை எழுதியவர் மகாத்மா காந்தி

இதை ஏன் வைத்துள்ளாய் என்று கேட்பீர்கள் என்றால் அதை மட்டும் வேண்டுமானால் அமேசான் மழைக் காட்டில் பரவும் காட்டுத் தீயில் போட்டு விடுகிறேன். 

No comments:

Post a Comment