வெங்கட
கிருஷ்ணன் எனும் மனிதன் ஆணவமாக பேசிய காணொளியைப் பார்த்தேன். கலப்பினத்துக்கும் மரபணு
மாற்றத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறியதிலேயே அந்தாள் ஒரு அரைவேக்காடு என்பது
தெரிகிறது.
பிறப்பிலேயே
உயர்வு தாழ்வு உண்டு என்று சொல்வதும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ள
முடியாது என்று அந்தாள் கூறுவதும் வக்கிரம், ஆணவம், ஜாதித்திமிர் என்ற அனைத்தின் கலவை
மட்டுமல்ல, அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
அனைவரும்
சமம் என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் அடித்தளம். அதற்கு எதிராக பேசிய வெங்கட
கிருஷ்ணனை அரசே கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். உயர் நீதிமன்றமாவது தானே முன்வந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிறப்பின்
அடிப்படையில் மனிதர்களில் உயர்வு, தாழ்வு உண்டு என்பதற்கு அந்தாள் பிடித்து தொங்குவது
வேதத்தையும் சாஸ்திரங்களையும்தான்.
அப்படி
மனிதர்களில் வேற்றுமை பாராட்டச் சொல்கிற வேதங்களின் வழியே இந்திய அரசியல் சாசனம் அமையவில்லை
என்பதுதான் சங்கிகளின் மிகப் பெரிய ஏக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வெங்கட
கிருஷ்ணன் ஒற்றைக் குரல் அல்ல. ஆர்.எஸ்.எஸ்
கொள்கைகளின் ஊது குழல்.
கம்பி
எண்ண வேண்டியவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருக்கிறார்கள்.
இதுதான்
இன்றைக்கு இந்தியாவின் பிரச்சினை
No comments:
Post a Comment