Wednesday, August 11, 2021

ஜெ முடிவுக்கு எதிராக அதிமுக அடிமைகள்

 



 

எங்கள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா நேற்று அனுப்பியிருந்த செய்தியின் தமிழாக்கத்தை கீழே தருகிறேன்.

 

****************************************************************************************

 

“பொது இன்சூரன்ஸ் தேசிய மய சட்ட திருத்த மசோதா பிரச்சினை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை மாநிலங்களவை முன்னவர் திரு பியூஷ் கோயல் கூட்டியிருந்தார். இம்மசோதாவுக்கு எதிராக  எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) முன்முயற்சி எடுத்திருந்தது.

 

வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தள் உள்ளிட்ட அனைத்து பெரிய எதிர்க்கட்சிகளும் மசோதாவை எதிர்த்தன. நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின. அதிமுக மட்டுமே அரசோடு நின்றது. இருப்பினும் இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இல்லை. நாளை மசோதாவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சிக்கிறது.

 

எப்படிப்பட்ட முடிவு வந்தாலும் வெற்றிகரமாக இயங்கும் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் தனியார்மயத்தைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இத்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்க இயக்கங்களும் உறுதியுடன் தொடரும்.

 

-         ஸ்ரீகாந்த் மிஸ்ரா

 

********************************************************************************************

 

1999 ம் வருடம் அடல் பிஹாரி வாஜ்பாய்தான் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கும் ஐ.ஆர்.டி.ஏ மசோதாவை அறிமுகம் செய்கிறார். முந்தைய குஜ்ரால் ஆட்சிக்காலத்தில் தோற்றுப் போன மசோதா அது. அதனை வாஜ்பாய் மீண்டும் கொண்டு வருகிறார்.

 

இடதுசாரிக் கட்சிகள், சமஜ்வாடி கட்சி, ஆர்.ஜே.டி கட்சி தவிர இன்னொரு பெரிய கட்சியும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தது.

 

ஆம்

 

அந்த கட்சி

 

அ.இ.அ.தி.மு.க

 

எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்ல, பி.ஹெச்.பாண்டியன் கடுமையாக விமர்சித்து பேசவும் செய்தார்.

 

ஜெயலலிதா மீது ஏராளமான குறைகள் விமர்சனங்கள் இருந்த போதிலும் “இன்சூரன்ஸ் துறையில் தனியார் அவசியமில்லை என்பதிலும் பொதுத்துறையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது” என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

 

அவரது கார் டயரை வழிபட்டுக் கொண்டிருந்த அவரது முன்னாள் அடிமைகள் மற்ற பல பிரச்சினைகள் போலவே இதிலும் அவரது நிலைப்பாட்டிற்கு துரோகம் செய்துள்ளனர்.

 

ஜெ வின் உயிரையே தியாகம் செய்தவர்களுக்கு அவரது கொள்கைகளை தியாகம் செய்வது பெரிதா என்ன!

 

புது முதலாளி மோடி முகம் கோணாமல் நடந்து கொள்வதுதானே முக்கியம்!

பிகு  1 : இப்பிரச்சினை தொடர்பான முந்தைய பதிவுகள்

 

பிகு 2: வழக்கம் போல ஜனநாயக மரபுகளை மிதித்து மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவையில் அறிவித்து விட்டது மோடி அரசு.

No comments:

Post a Comment