Saturday, August 7, 2021

முதல் தங்கம் - 47 வது இடம்

 


டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைக்கு இந்தியாவிற்கு நல்ல நாள்.

நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் தங்க மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீரஜ் சோப்ரா வென்ற தங்கம் இந்தியாவிற்கு மிக முக்கியமானது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

ஆம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுதான்.

இது நாள் வரை 

1984 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி.உஷா நான்காம் இடம் பெற்றதும் 2004 ஏதென்ஸ் போட்டியில் அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் ஐந்தாம் இடம் பெற்றதுமே

சாதனைகளாக இருந்தது.

கதவு இன்று திறந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் உருவாகும் என்று நம்புவோம்.




மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியமைக்கு வாழ்த்துக்கள்.

இதுநாள் வரை இந்தியா அதிகபட்சமாக பெற்றது இந்த போட்டியில்தான். 

முதல் தங்கத்தை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் 66 வது இடத்தில் இருந்த இந்தியா 47  வது இடத்துக்கு முன்னேறியது. 

No comments:

Post a Comment