Sunday, August 1, 2021

ஒன்றோடு நிற்கக் கூடாது

 



டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றை வெள்ளிப் பதக்கத்தோடு இந்தியா 61 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் ஏற்கனவே வெளியேறி விட்டனர். பி.வி.சிந்து இன்று வெங்கலப்பதக்கத்திற்காக மோத உள்ளார். ஆம், அவர் அரையிறுதிப் போட்டியில் நேற்று தோற்று விட்டார். அவர் நன்றாக விளையாடவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவரை விடவும் எதிர்த் தரப்பு வீராங்கனை இன்னும் சிறப்பாக விளையாடினார். அவ்வளவுதான்.

ஒற்றைப் பதக்கத்தோடு இந்தியா நின்று விடுமா? கடந்த ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற ஒற்றை வெள்ளி, ஒற்றை வெங்கலம் என்ற அளவையாவது சமன் செய்வோமா?

பார்ப்போம்!

மகளிர் ஹாக்கி அணி காலிறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. டிஸ்கஸ் த்ரோ இறுதிப் போட்டிக்கு கமல்ப்ரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார். இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று காலிறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. சதிஷ்குமார் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

140 பேர் கொண்ட இந்தியக் குழுவில் எஞ்சியிருக்கும் இவர்களாவது இந்தியாவின் மானம் காப்பார்கள் என்று நம்புவோம்.

இந்திய விளையாட்டுத்துறையை சீரமைக்க வேண்டும் என்று ஒலிம்பிக் முடிந்த ஒரு வாரம் வரை பேசிக் கொண்டிருந்து விட்டு பின்பு வழக்கம் போல இந்தியாவின் ஒரே விளையாட்டு கிரிக்கெட் என்று தொலைக்காட்சியில் ஐ.பி.எல் பார்ப்பதில் மூழ்கிடுவோம்.

No comments:

Post a Comment