Tuesday, August 31, 2021

நீதிபதிக்கே மறுக்கப்பட்ட நீதி . . .

 




திரு அகில் குரேஷி - திரிபுரா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி. சில நாட்கள் முன்பாக வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் இவர் பெயர் இருந்திருக்க வேண்டும். 



ஆனால் இடம் பெறவில்லை.

இவருக்கு இதற்கு முன்பாக நிகழ்ந்ததைப் பார்த்தால் இதில் அதிர்ச்சிக்கு இடமில்லை.

குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி இவர். தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இவருடைய ஜூனியர் ஒருவருக்கு தற்காலிகப் பொறுப்பு அளிக்கப்படுகிறது. இவர் மும்பைக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து மத்திய பிரதேசத்திற்கு. கிட்டத்தட்ட ஐம்பது நீதிபதிகள் கொண்ட அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு வருகையில் நான்கு நீதிபதிகள் மட்டுமே கொண்ட திரிபுரா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி நாரிமன், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலேஜியத்தில் இவருக்காக கடுமையாக வாதாடி உள்ளார். அவர் முன்வைத்த கருத்துக்களை நிராகரிக்க முடியாததால் ஒரு வருட காலம் அந்த கோப்பின் மீது எந்த முடிவும் எடுக்காமல், நாரிமன் ஓய்வு பெற்ற அடுத்த வாரமே அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள்.

இப்படி அவரை மோடி அரசு பழி வாங்க என்ன காரணம்?

ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டதுதான்.

அது என்ன வழக்கு?

சோரப் ஷகாபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கு?

யாரந்த குற்றவாளி?

அமித் ஷா.

அகில் குரேஷி இத்தனை நாள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்ற உங்கள் மனதின் குரல் எனக்கும் கேட்டு விட்டது.

மோடி ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள்தானே!


No comments:

Post a Comment