Friday, August 27, 2021

முடியாது யுவர் ஆனர் - மோடி

 


கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி, எக்காலத்திலும் தடைபடக் கூடாது என்றும் கல்வி ஒரு அடிப்படை உரிமை ஆதலால், அவர்களின் கல்விக்கான கட்டணத்தை பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்த முடியுமா என்று கேட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதியரசர்களே, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

பிரதமர் நிவாரண நிதி என்பதற்கு மாறாக பி.எம்.கேர்ஸ் நிதி என்று புதிதாக ஒன்றை உருவாக்கியதன் காரணமே புரியாத வெள்ளந்திகளாக இருக்கிறீர்களே நீங்கள்!

பி.எம்.கேர்ஸ் நிதி என்பது ஒரு வழி ரகசியப்பாதை. அதில் என்ன செய்கிறீர்கள் என்று யாரும் கேட்கக் கூடாது, ஆர்.டி.ஐ கூடாது என்பதற்காகத்தானே அதை ஒரு தனியார் அறக்கட்டளையாக அமைத்தோம். பிறகு எப்படி பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து பணம் தர முடியுமா என்று கேட்கிறீர்கள்?

தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய் பாரம்பரியத்திலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தடுப்பூசி விஷயத்தில் நீங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதால்தான் அனைவருக்கும் அரசே செலவை ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னோம். அப்போது கூட பி.எம்.கேர்ஸ் நிதியை தொடவில்லை. தனியார் கொள்ளையடிப்பதற்கான வாசலை இந்த சூழலிலும் திறந்தே வைத்துள்ளோம். ஆனாலும் தடுப்பூசி என்பது நான் போட்ட பிச்சை என்று பித்தர்கள் சிலரை பேச வைக்குமளவிற்கு எங்கள் ஆதரவாளர்களை மூளைச்சலவை செய்து மூடர்களாக்கி வைத்துள்ளோம்.

பி.எம்.கேர்ஸ் நிதி யை இப்படி அனாதைக் குழந்தைகளுக்கு செலவிட்டால் எம்.எல்.ஏ க்களை எப்படி எங்களால் விலைக்கு வாங்க முடியும்?

அந்த நிதி பற்றி கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று உங்களில் ஒருவரையே சொல்ல வைத்துள்ளேன் என்பதை மனதில் கொண்டு இனியும் அது பற்றி பேசாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 

நோ மீன்ஸ் நோ

இவண்

பி.எம்.கேர்ஸ் பெரு முதலாளி என்று உண்மையான தேசபக்தர்களால்
எரிச்சலோடு வர்ணிக்கப்படும் 

நரேந்திர மோடி

No comments:

Post a Comment