Wednesday, August 4, 2021

அய்யோ முடியலை, ஆட்டு அண்ணாமலை

 


ஆட்டு அண்ணாமலையின் காணொளி ஒன்றை பார்த்தேன்.

தமில் மண்ணில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி அந்த தமில் மாமனிதர்கள் பற்றி, தமில் நாடு முழுதும் தமிலர்களுக்கு சொல்லப் போவதாக அவர் ஒரு பட்டியல் போட்டார்.

(அந்த மனிதனுக்கு தமிழ், தமிழர்கள், தமிழ் நாடு என்று சொல்ல வரவில்லை என்பது ஒரு கொடுமை)

வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்ட்டவர்களாக கட்ட பொம்மன், தீரன் சின்ன மலை, வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், அழகு முத்து கோன், வேலு நாச்சியார் ஆகியோர் அடங்கிய பட்டியலில் வல்வில் ஓரி, ராணி மங்கம்மா ஆகியோர் வருகின்றனர்.

வல்வில் ஓரி எப்போது வெள்ளையரை எதிர்த்து போராடினார்? அவரை கடையேழு வள்ளல்களில் ஒருவராகத்தானே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

ராணி மங்கம்மா மதுரையை ஆண்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வணிகம் செய்யக் கூட வரவில்லையே! அவர் பெரும்பாலும் மராட்டியர்களோடும் பங்காளிகளுடனும்தானே போராடி கடைசியில் பேரனால் சிறை வைக்கப்பட்டுத்தானே இறந்தார்!

எப்படி அண்ணாமலை இதெல்லாம்?

மோடியோட சிஷ்யப்புள்ளைங்க்றதை நிரூபிக்கிறீங்களே!

அவருதான் வரலாற்றை சொதப்பித் தொலைப்பாரு!

அவருக்கு எழுதிக் கொடுக்கற அதே அதி புத்திசாலிதான் (😁😁😁) உங்களுக்கும்  எழுதித் தருகிறாரா?


1 comment:

  1. வரலாறு திரிக்கப் படுகிறதா?.. ஏற்கனவே திக கட்சிகள் வரலாற்றை மாற்றியது இல்லாமல் இது வேறா?.. இருக்கட்டும். எதுவரை போகுமோ??..ஆண்டவா?
    அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete