Saturday, August 28, 2021

சங்கி பயந்தாங்குளிகளும் அகண்ட பாரதமும்



ஆப்கான் பிரச்சினை மூலம் மோடி அகண்ட பாரதத்தை உருவாக்கும் முயற்சியை தொடங்கி விட்டார் என்ற ஒரு சங்கியின் பதிவைப் பற்றி சில தினங்கள் முன்பு  எழுதியிருந்தேன். 

அதன் தொடர்ச்சியாக இன்னொரு சங்கி இன்னும் விரிவாக எழுதினார். அந்த காமெடியை நீங்களே படித்து வாய் விட்டு சிரியுங்கள்.





 “அம்பாள் எந்த காலத்திலடா பேசியிருக்கிறாள்” என்று பராசக்தி வசனம்தான் தேவைப்படுகிறது.

 இலங்கை எப்போது இந்தியாவின் பகுதியாக இருந்திருக்கிறது?

அதே போலவே திபெத்தும், மியன்மரும், நேபாளமும்?

 ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த பாபர் அன்றைய இந்தியாவில் இருந்த அரசர்களை வென்று டெல்லியில் முகலாய சாம்ராஜ்யம் அமைத்தாரே, தவிர இந்திய அரசர்கள் யாரும் ஆப்கானை வென்று தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததில்லை.

 இதில் விவேகானந்தரை வேறு இழுக்கிறார்கள்.

 நான் எப்போதும் சங்கிகளில் அடி முட்டாள்கள், அயோக்கியர்கள் என்று இரண்டு வகை உண்டு என்று சொல்வேன்.

 விவேகானந்தரின் பூர்வாசிரமப் பெயரான நரேந்திரர் என்பதை பயன்படுத்தி அவர் காலத்தில் இருந்த அகண்ட  பாரதத்தை இன்னொரு நரேந்திரர் மீட்கப் போகிறார் என்று சொல்வது  அடி முட்டாள்களை நம்ப வைக்க அயோக்கியர்கள் செய்யும் தந்திரம்.

 பத்திரிக்கையாளர்களை சந்திக்கக்கூட திராணியில்லாத ஒரு கோழை பிரதமர் அகண்ட பாரதம் அமைப்பார் என்று சொல்வது ஒரு குரூரமான நகைச்சுவை.

 ‘பயமே என்னைப் பார்த்து பயப்படும்” என்று வசனம் பேசிக் கொண்டே குட்டி ஹட்ச் நாயைப் பார்த்து பயப்படும் “தமிழ்ப்படம்” சிவா போன்ற வீரர்கள் இவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 

பிகு: சுதந்திரப் போராட்டத்திற்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத. மாறாக வெள்ளையர்கள் நம் எதிரிகள் அல்ல, இஸ்லாமியர்கள்தான் என்று சொன்ன ஹெட்கேவர் சுதந்திரத்தை பேணிக்காக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கினார் என்று சொல்வது காமெடி அல்ல, அயோக்கியத்தனம். 

No comments:

Post a Comment