Friday, July 22, 2016

ப.சிதம்பரம் சரியாதானே பேசியிருக்காரு!



"ப.சிதம்பரம் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கட்சி ஒதுங்கிக் கொண்டது

சிதம்பரத்தின் மீது வெங்காய நாயுடு கடும் தாக்குதல் "

என்று இன்றைய தலைப்புச் செய்திகள் சொன்னது. 

சிவகங்கைச் சீமான் அப்படி என்ன சொல்லிட்டாரு என்று பார்த்தால் புதுசாவோ, பெரிசாவோ ஒன்னும் சொல்லலை.

காஷ்மீர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் என்ன தவறு இழைக்கிறது என்று காலம் காலமாக என்ன குற்றச்சாட்டை வைக்கிறோமோ அதைத்தான் அவரும் சொல்லியுள்ளார்.

ப.சி யின் ஆங்கிலப் பேட்டியை  இனைப்பில் படியுங்கள் .

"காஷ்மீர் எந்த சூழ்நிலையில் இந்தியாவோடு இணைந்தது என்பதை மறந்து விட்டோம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறி விட்டோம்.  நம்பிக்கைகளை தகர்த்து விட்டோம். இதற்காக நாம் கொடுத்த விலை பெரிது.

காஷ்மீரை வெறும் மண் என்று பார்க்கிறோமோ தவிர மக்களாக பார்க்க தவறி விட்டோம். இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மக்கள் அவர்களுக்கான சட்டத்தை வகுத்துக் கொள்ளட்டும்"

இதுதான் காஷ்மீர் விஷயத்தில் அரசு செய்த தவறு என்று பலரும் சுட்டிக்காட்டுவது.  உறுதிமொழிகளை தகர்த்தது மட்டுமல்ல, கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீர்த்துப் போகச் செய்தது காஷ்மீர் மக்களை விலகிப் போக வைத்தது. 

நாம் கேள்வி கேட்பதற்கு முன்பே அந்த பேட்டியில் ப.சி இன்னொன்றை சொல்லியுள்ளார்.   

காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் அத்தவறை 2010 ல் கண்டுபிடித்தார்களாம். ஆனால் சரி செய்ய தவறி விட்டார்களாம்.

பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியலுக்கு காஷ்மீர் பிரச்சினையை பயன்படுத்துவதை விட்டுவிட்டு அம்மாநில மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்தியரசு எடுக்க வேண்டும்.

அதன் முதல் கட்டமாக மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

ஆனால் முட்டாள்களும் முரடர்களும் மட்டுமே இருக்கிற மோடி அரசு அப்படி சரியான வழியில் செல்லாது. பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கும். 

 

1 comment:

  1. need clarification / your angle of thought….

    why we need Kashmir….from the day one it is troubling in the form of spending money and other state people (soldier) life.

    example last 68 years (min. we were spending INR 50 / month crore means inr 40,800 crores we would have spent and all are for nothing (no return to country ). why my neighbors/ brothers die in the non returnable / non profitable / no use the to the nation job. i could not under stand. last month my friend’s brother lost his life in baramulla at cross fire with local people. his entire family in the road now.

    we have to cut and remove the cancer once for all to better save other parts…..



    ReplyDelete