Sunday, July 17, 2016

முப்பது ஆண்டுகள் முடிந்தது




நேற்று எழுதியிருக்க வேண்டிய பதிவு. சென்னைக்கு போய் விட்ட காரணத்தால் ஒரு நாள் கால தாமதமாக இன்று எழுதுகிறேன்.

முப்பது ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆம் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து முப்பது ஆண்டுகள் முடிந்து முப்பத்தி ஓராவது ஆண்டில் அடியெடுத்து வைத்தாகி விட்டது. 

மிகவும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 16.04.1986 அன்றுதான் பணியில் சேர்ந்தேன். ஆனால் மூன்று மாத பயிற்சிக் காலம் பணிக்காலமாக சேர்த்துக் கொள்ளப்படாது. ஆகவே தகுதி காண் பருவம் தொடங்கிய 16.07.1986 என்பதுதான் பணி தொடங்கிய நாள்.

இப்போதுதான் நெய்வேலியிலிருந்து புறப்பட்டு சென்னையில் பயிற்சி வகுப்பிற்கு சென்றது போல இருக்கிறது. பூமியின் வேகமான சுழற்சியால் முப்பது வருடங்கள் ஓடி விட்டது. 

என்ன எழுதுவது என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

ஒரு முறையாவது வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட பதினான்கு மாடி எல்.ஐ.சி கட்டிடத்திற்கு முதல் முறை சென்றதே நேர்முகத் தேர்விற்காக என்பதும் அதுதான் வாழ்வின் திருப்புமுனை என்பதும் குறிப்பிடத்தக்கது. (நேற்று கூட எல்.ஐ.சி கட்டிடத்திற்குத்தான் சென்றிருந்தேன்)

தனிப்பட்ட பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையா?

உலகை, உறவுகளை, நட்புக்களை, தோழமைகளை, அரசியலை, பொருளாதாரத்தை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புக்களையா?

பேசவும் எழுதவும் தயங்கி தடுமாறிய நிலையிலிருந்து இன்று பெற்றுள்ள முன்னேற்றத்தையா?

கற்றது கைமண்ணின் நூறில் ஒரு அளவு, இன்னும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்ததையா?

பூங்கொத்துக்களையும் கல்லடிகளையும் சமமாகவே கருதும் பக்குவத்தை பெற்றதையா?


எரிச்சலூட்டிய சில நிகழ்வுகள் மனதை பாதித்து சோர்வுற்ற நிலையில் அந்த பதிவு அமைந்திருந்தது. அடுத்தவர்களை காயப்படுத்தும் வன்மத்தையும் வக்கிரத்தையுமே வாழ்க்கையாகக் கொண்டவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற மன நிலை வந்து விட்டதால் அவற்றை இதயத்திற்கு எடுத்துச் செல்லாததால் வலி ஏற்படுவதில்லை என்பதுதான் இரண்டாண்டுகளில் நான் அடைந்துள்ள மாற்றம். தொழிற்சங்கம், இடதுசாரி இயக்கம்,  வலைப்பக்கம் ஆகியவை தாண்டி சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருவது என்பதும் இந்த இரண்டாண்டு கால முன்னேற்றத்தில் ஒன்று.

கல்லூரிப் படிப்பை முடித்த ஓரிரு மாதங்களிலேயே எல்.ஐ.சி பணி கிடைத்தது என்பது ஒரு வரம் என்றால் எல்.ஐ.சி யில் இணைந்ததாலேயே  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற மகத்தான அமைப்பில் இணையக் கிடைத்த வாய்ப்பு என்பது அதை விட மிகப் பெரிய வரம். 

என் வாழ்வும் வளமும் என்றும் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற உணர்வை எப்போதும் போல மனதிலிருத்தி பயணத்தை தொடர்கிறேன். 

 

8 comments:

  1. பூங்கொத்துக்களையும் கல்லடிகளையும் சமமாகவே கருதும் பக்குவத்தை பெற்றதையா?

    கல்லூரிப் படிப்பை முடித்த ஓரிரு மாதங்களிலேயே எல்.ஐ.சி பணி கிடைத்தது என்பது ஒரு வரம்

    தனிப்பட்ட பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையா?


    now you can help 4 economically weak college boys sir,
    seiveergalaa! seiveergalaa!!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. ஏற்கனவே சில உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். பொது வெளியில் அந்த விபரங்கள் அவசியம் இல்லை என்பதால் பகிர்ந்து கொள்வதில்லை. சரி இதைச் சொல்ல அனானியாக வர வேண்டிய அவசியம் இல்லையே!

      Delete
  2. தோழருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. Congratulations sir!

    ReplyDelete
  4. முப்பது ஆண்டுப் பணி முடிந்ததா தோழரே? நான் உங்கள் வயதே முப்பதுதான் இருக்கும் என்றல்லவா நினைத்தேன்! (அட உங்கள் உழைப்பை, சுறுசுறுப்பை வைத்துத்தான் அப்படி நினைத்து விட்டேன்) இன்னும் 60ஆண்டுகள் உங்கள் அலுவலகப்பணியையும் கடந்த மக்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறேன் தோழா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர். ஆனால் முப்பது வயது என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர்

      Delete
  5. உழைத்து முன்னேறும் தங்களுக்கு சுவையான கேசரி வாழ்த்துகள்!

    ReplyDelete