Thursday, July 14, 2016

மோடியின் முகத்தில் மீண்டும் ஒரு குத்து






மோடியின் முகத்தில் மீண்டும் குத்து விட்ட நீதிமன்றம்.

மோடியை மறுபடியும் தலையில் தட்டிய கோர்ட்

மோடிக்கு நீதிபதிகள் தொடர்ந்து சவுக்கடி

மோடியின் கனவை இன்னொரு முறை தகர்த்த முக்கிய தீர்ப்பு.

அருணாச்சலப் பிரதேசத்திலும் மூக்குடைபட்ட மோடி

இப்படி என்ன தலைப்பு வேண்டுமானாலும் இந்த பதிவிற்கு வைக்கலாம். அத்தனையும் பொருத்தமாகவே இருக்கும்.

ஆம் குதிரை பேரம் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்த மோடியின் கோணல் புத்தி நடவடிக்கை இரண்டாவது முறையாக பரிதாபகரமாக தோற்றுப் போயிருக்கிறது.

முதலில் அருணாச்சலப் பிரதேசத்தில்தான் சூது தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ க்களை தன் பிடிக்குள் கொண்டு வந்து சபாநாயகரை பதவி நீக்கம் செய்து போட்டி சட்டமன்றம் நடத்தி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்ந்தது. இந்த வேலைகளை எல்லாம் முன்னின்று நடத்தியது அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுனராக அனுப்பப்பட்ட காவி ஒன்று.

அருணாச்சலப் பிரதேச அனுபவம் கொடுத்த உற்சாகத்தில் உத்தர்கண்ட் மாநில அரசை கலைக்க முயற்சி செய்து உயர் நீதிமன்றத்தாலும் பின்பு உச்ச நீதிமன்றத்தாலும் மூக்குடைபட்டது.

இப்போது அருணாச்சல பிரதேசத்திலும் பழைய ஆட்சியை கலைத்தது, சபாநாயகரை நீக்கியது, புதிய முதல்வரை அமர்த்தியது இப்படி எதுவுமே சரியில்லை என்று கவர்னரின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து விட்டு பழைய முதல்வரையே மீண்டும் பொறுப்பேற்கச் சொல்லி தீர்ப்பளித்துள்ளது கவர்னர் தனது வரம்பு மீறி செயல்பட்டுள்ளார் என்றும் சூடாக சொல்லியுள்ளது.

அரசியல் சாசனப் பிரிவு 356 ஐ அகற்றுவதே இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலைகளை தடுக்க உதவிடும்.

ஜனநாயகத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத பாசிஸ குணாம்சம் கொண்ட மோசமான சர்வாதிகாரியே மோடி என்பதை அவர் பிரதமராவதற்கு முன்பிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர் நல்லவரு, வல்லவரு, மன்னவரு என்று பலர் மதி கெட்டுப் போய் ஆதரித்தார்கள். மோடியின் பாணியில் குஜராத் அரசு கொண்டு வந்த ஒரு குதர்க்கமான சட்டத்தைக்கூட சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான  வேறுபாடு என்ன என்பது கூட தெரியாமல் அறைகுறையாக புரிந்து கொண்டு ஜனநாயகத்தை வாழ வைக்கும் மாற்றம் என்று பாராட்டிய கூத்து எல்லாம் கூட நடந்திருக்கிறது.

மோடிக்கும் ஜனநாயகத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பே கிடையாது என்பதை அருணாச்சலப் பிரதேச, உத்தர்கண்ட் மாநில சம்பவங்கள் உணர்த்தியுள்ளது. அந்த ஜனநாயக படுகொலைகள் தொடர அனுமதிக்காமல் உச்ச நீதிமன்றம் தடுத்துள்ளது நல்ல விஷயம். அவ்வப்போது சில நல்ல தீர்ப்புக்கள் மூலமாக நீதித்துறையும் சில சமயம் பாதுகாக்கப்படுகிறது.

இரண்டு முறை அடிபட்ட பிறகாவது மோடி திருந்துவாரா?

வாய்ப்பே கிடையாது என்பதுதான் மோடியின் இரண்டாண்டு ஆட்சிக் காலம் தருகிற அனுபவம்

பின் குறிப்பு :  காங்கிரஸ் கட்சி எத்தனை மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்துள்ளது தெரியாதா என்றெல்லாம் காவிகளே தயவு செய்து பொங்கிக் கொண்டு வராதீர்கள். அவர்களை எதைச் செய்தாலும் எதை சாப்பிட்டாலும் நீங்களும் அதையே செய்வீர்களா?  சாப்பிடுவீர்களா?

2 comments:

  1. போங்கடா புலம்பல் கேசுங்களா

    ReplyDelete
  2. இப்போ புலம்ப வேண்டியது காவிகளின் நேரம் அனானி. அடி வாங்கியது நீங்கதான்.

    ReplyDelete