சமீபத்தில்
குடந்தைக்கு ஓர் அவசரப்பயணம். வேலை கொஞ்சம் சீக்கிரமாய் முடிந்து
விட்டது. குடந்தை, ஜெயங்கொண்டான், விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை,
திருக்கோயிலூர், திருவண்ணாமலை மார்க்கமாக வேலூர் திரும்பினேன்.
ஜெயங்கொண்டானில் தேனீர் சாப்பிடுகையில் சாலையில் இருந்த மைல்கல் கங்கை
கொண்ட சோழபுரம் பத்து கிலோ மீட்டர் எனச் சொன்னது. எனவே வண்டி அங்கே
திரும்பியது.
தஞ்சாவூர்
பெரிய கோயில் போல இதுவும் பிரம்மாண்டமாக அதே வடிவமைப்போடு இருந்தாலும்
ஏதோ குறைந்தது போலவே தோன்றியது. அங்கே இருந்த நந்தி மஞ்சள் சுண்ணாம்பு
அடித்தது போல இருந்ததே என்னைப் பொறுத்தவரை சுவாரஸ்யம் குறைந்து போனதற்கு
முதல் காரணம் என்று நினைக்கிறேன்.
சங்கமம் படத்தில் என்னவோ ரொம்பவே அழகாகக் காண்பித்திருந்தார்கள். ஆனாலும் என்னவோ தெரியவில்லை, திரையில் ஈர்த்த அளவிற்கு நேரில் ஈர்க்கவில்லை.
அசலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசமா இல்லை நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசமா, என்ன காரணம் என்று தெரியவில்லை.
அசலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசமா இல்லை நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசமா, என்ன காரணம் என்று தெரியவில்லை.
அங்கே எடுத்த படங்கள் கீழே
முக்கியமான
பின் குறிப்பு : கோயிலுக்கெல்லாம் போன இவனெல்லாம் ஒரு கம்யூனிஸ்டா என்று
யாரும் கொந்தளிக்க வேண்டாம் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். ஒரு
சுற்றுலாப் பயணியாகத்தான் போனேன், பக்தியோடு அல்ல.
ஆனாலும்
கூட வழிபடுவது வேறு, கலையம்சம் கொண்ட இடத்தை பார்ப்பது வேறு. என்பது
சில அரைவேக்காடுகளுக்கு புரியுமா என்று எனக்கு தெரியாது.
தோழர்,
ReplyDeleteசுற்றுலா பயணிகள், இரைச்சல் இல்லாத அமைதியான சூழல், பெரிய முயற்சி எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தாத தோல்வி, இராசேந்திர சோழனின் விசும்பல் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா?
குமுதத்திற்கு சிறுகதை எழுத துவங்கிய பின் உங்கள் உள் இருந்த கவிஞர் காணாமல் போய்விட்டாரா தோழர்?
ஊரறிந்த தஞ்சையைவிட
உள்ளுறைந்த கங்கைகொண்ட சோழபுரமே எம் உள்ளம் கவர்ந்தது தோழர்!
பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete