Friday, July 29, 2016

பசுக்கள் சாகட்டும் என்ற விவேகானந்தர்

பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் காலிகள் செய்யும் அராஜகம், அயோக்கியத்தனம் ஆகியவற்றைப் பார்க்கையில் முன்பு படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. 





"வங்காளம் கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவித்த காலம் அது. வறட்சி ஆயிரக்கணக்கான மக்களை பலியாக்கிக் கொண்டிருந்தது. எங்கும் துயரம் என்ற நிலையில் கோமாதா பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பினர் விவேகானந்தரைச் சந்தித்து தாங்கள் பஞ்சத்தில் பசு மாடுகள் இறந்து போகாமல் பாதுகாத்து பராமரிக்கும் பணியை செய்வதாகவும் அந்த புனிதக் கடமைக்கு விவேகானந்தர் நிதியளிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். 

பஞ்சத்தில் இறந்து போகும் மனிதர்களை பாதுகாக்க ஏதேனும் தொண்டு செய்கிறீர்களா என்று விவேகானந்தர் வினவ, மனிதர்கள் தங்கள் பூர்வ ஜென்ம பயன் காரணமாகவே இறந்து போகிறார்கள். ஆகவே அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. கடவுளின் வடிவான பசுக்களை பாதுகாப்பதே முக்கியம் என்று அவர்கள் சொன்னார்கள். 

உடனே கோபமுற்ற விவேகானந்தர், "மனிதர்கள் இறப்பது பூர்வ ஜென்ம பயன் என்றால் பசுக்களும் தங்களின் பூர்வ ஜென்ம பயன் காரணமாக சாகட்டும்" என்று சொல்லி அவர்களை துரத்தி விட்டார். 

 பசு அரசியல் நடத்தும் பாழாய் போனவர்களுக்கு அது சமர்ப்பணம்.

 

2 comments:

  1. 1857 சிப்பாய்க் கலகத்துக்கு காரணமே பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பு தானே காம்ரேட். விவேகானந்தரை இப்படி புரிஞ்சுக்கிட்டீங்களே. உங்க பதிவை நீங்களே இன்னொருமுறை "ஆழமா" படிச்சு பாருங்க. என்னம்மா இப்படி பண்றீங்களேமா.
    விஜயன்

    ReplyDelete
  2. வாங்க விஜயன் சார். ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் உங்க ஸ்பெஷாலிடியான "குழப்பமான பின்னூட்டம்" மட்டும் மாறவே இல்லை. நான் என்ன புரிந்து கொண்டேன் என்பது இருக்கட்டு. நீங்க என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன். ப்ளீஸ்

    ReplyDelete