Friday, July 8, 2016

செத்தவருக்கு உயிர் கொடுத்த . . . .




"எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். இனி மிஞ்சியிருப்பது வெறும் அற்ப ஆசிரியன் மட்டுமே"

வலி மிகுந்த இந்த வார்த்தைகள் கடந்தாண்டு மிகவும் வேதனை கொடுத்தது.

வலி நிவாரணியாக உயர்நீதி மன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த ஏராளமானவர்கள், அமைப்புக்கள், வீதிக்கும் நீதி மன்றத்திற்கும் வீரியத்தோடு எடுத்து வந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கும் கிடைத்த மகத்தான் வெற்றி.

ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி நடுங்கி கட்டப் பஞ்சாயத்து செய்த நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கும் கள்ள மவுனம் சாதித்த இரு பிரதானக் கழகங்களுக்கும் கிடைத்த குட்டு.

இனி ஒரு படைப்பாளி பெருமாள் முருகன் போல அச்சுறுத்தப் பட மாட்டார்கள் என்று நம்புவோமாக.

செத்துப் போனதாக அறிவித்த எழுத்தாளர் மனதில் நம்பிக்கையை துளிர வைத்த தீர்ப்பு, நீதித்துறை கூட இன்னும் உயிரோடு உள்ளதை காண்பித்துள்ளது. 

பின் குறிப்பு : பெருமாள் முருகனின் பழைய அறிக்கையை இங்கே படிக்கலாம்

மாதொருபாகன் ஈர்க்கவில்லை   என்ற என் கருத்திலும் மாற்றமில்லை.  

No comments:

Post a Comment