ஏ.டி.எம் மில் பணம் எடுக்கப் போகையில் சில சுவாரஸ்யமான அனுபவங்கள் குடிமகன்கள் மூலம் கிடைத்துள்ளது.
இன்றும் ஒரு அனுபவம் கிடைத்தது. தந்தவர் குடிமகன் அல்ல.
வேலூர் மாவட்ட ஆட்சியரகம் அருகில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. அங்கே இரண்டு இயந்திரங்கள் உண்டு. ஒரு இயந்திரத்தில் நான் பணம் எடுக்கையில் பக்கத்து இயந்திரத்தில் இன்னொருவர்.
"இயந்திரத்தில் போதுமான பணம் இல்லை" என்று எனக்கு சொன்ன அதே பதிலை அவருக்கும் சொன்னது. அவர் என்னவென்று புரியாமல் "இது என்ன சார்?" என்று கேட்டார்.
கேஷ் இல்லையாம் சார் என்று நான் பதில் சொல்ல அவர் கோபமாகி விட்டார். "அக்கவுண்டில நிறையவே பணம் இருக்கு சார். ஏன் இப்படி தப்பா சொல்றாங்க" என்று கொந்தளித்து விட்டார். உங்க அக்கவுண்டில பணம் இல்லைனு சொல்லலை. மிஷினில்தான் இல்லை என்று சொன்னாலும் அவர் சமாதானமாகவில்லை.
"ஒரு ஆத்திர அவசரத்துக்குத்தான பணம் எடுக்க வரோம். இப்படி சொன்னா எப்படி?" என்ற கேள்வி நியாயமானதுதானே!
எதிரிலேயே கர்னாடகா வங்கியின் ஏ.டி.எம் இருந்தது. அங்கே போய் இருவரும் பணம் எடுத்துக் கொண்டோம்.
வண்டியை கிளப்பும் போது அவர் சொன்னார்.
"இந்தியாவிலேயே பெரிய பேங்க் ஸ்டேட் பேங்க்னு சொல்றாங்க. அங்க பணம் இல்லை. இது அதை விட சின்ன பேங்க். இங்க இருக்கு"
பின் குறிப்பு : ஏ.டிஎம்மால் வெறுப்பான ஒரு அனுபவம் உள்ளது. அது பற்றி நாளை.
ஆகா
ReplyDeleteஇப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்