Tuesday, February 9, 2016

ஒரே ஊர்ல இரண்டு வரலாறு !!!???



வரலாறு எப்படியெல்லாம் திரித்து எழுதப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை கொச்சின் நகரில் உள்ள இரண்டு அருங்காட்சியங்களில் பார்க்க முடிந்தது. 






மேலே உள்ள படம் கொச்சினில் உள்ள இந்திய கடற்படை அருங்காட்சியகத்தில்  எடுக்கப்பட்டது. இவர் குஞ்ஞாலி மரைக்காயர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் கோழிக்கோடு பகுதியில் வெளிநாட்டுப் படைகள் ஊடுறுவாமல் தடுத்த கப்பற்படை தளபதிகள், வீரர்கள் என்று இந்திய கப்பற்படை அமைத்துள்ள மியூசியம் சொல்கிறது.

அதே கொச்சினில் அரச பரம்பரை உருவாக்கிய இன்னொரு மியூசியம் உள்ளது. டச்சுக்காரர்கள் ராஜாவுக்காக கட்டிக் கொடுத்த அரண்மனையில் அந்த மியூசியம் செயல்படுவதால் அதற்கு ட்ச்சு மியூசியம் என்றே பெயர். அந்த மியூசியத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் வகையறாக்களை கடற்கொள்ளையர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

டச்சுக்காரர்கள் மற்றும் போர்ச்சுகீசிய நாட்டவரின் ஆதிக்கத்தை தடுத்ததால் அந்த கோபத்தை “கடற்கொள்ளையர்கள்” என்று வர்ணித்து தீர்த்துக் கொண்டார்கள் போல.

இதில் இன்னொரு செய்தியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டச்சு அரண்மனை மியூசியம் இருந்தாலும் அங்கே டிக்கெட் வழங்குவதிலிருந்து கண்காணிப்புப் பணி ஆகியவற்றில் இருந்தது என்னமோ வெளிநாட்டுக்காரர்கள்தான்.


மேலே உள்ளதுதான் அந்த டச்சு அரண்மனை

இந்திய சுதந்திரத்திற்காக படை வீரர்கள் 1806 ல் வேலூரிலும் 1857 ல் வட இந்தியாவிலும் கிளர்ந்தெழுந்த புரட்சியை சிப்பாய்க் கலகம் என்றுதானே பிரிட்டிஷார் தொகுத்த வரலாறு சொல்கிறது!!

சமீப கால வரலாறே இப்படியென்றால் இதிகாச ராமன் இங்கேதான் பிறந்தான் என்று திரிப்பதெல்லாம் எப்படிப்பட்ட தில்லாலங்கடி வேலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

  1. உண்மைதான் நண்பரே
    சமிபத்திய வரலாறே இப்படியென்றால்

    ReplyDelete