இந்த வார குமுதம் இதழ் ( 29.02.2016 தேதியிட்டது) படித்து அதிர்ந்தே போனேன்.
மகாமகத்தின் முக்கியமான நிகழ்வு நாளை 22.02.2016 அன்றுதான். அது மிக சிறப்பாக நடைபெற்றது என்று குமுதம் இதழோ முன்பே அச்சிடுகிறது. நான் வாங்கியது இன்று. நேற்றே அச்சடித்திருந்தால் மட்டுமே இன்று தமிழகம் எங்கும் விற்பனை செய்வது சாத்தியம்.
இதிலே மிகப் பெரிய காமெடி என்னவென்றால் "ரஜனிகாந்த் வருகிறார், விஜயகாந்த் வருகிறார் என்று பரவிய வதந்திகளும் அதை சமாளித்த காவல்துறையும்" என்று போட்டுள்ள செய்திதான். ஒரு வேளை நாளை இவர்களே வதந்திகளை பரப்புவார்களா?
செய்திகளை முந்தித் தருவது என்பது முக்கியம்தான். அதற்காக இவ்வளவு முந்தியா?
அடுத்த வார இதழில் பிரசுரிப்பதற்காக எழுதி வைத்திருந்ததை யாராவது தவறாக இந்த வாரமே அச்சுக்கு அனுப்பியிருப்பார்களோ?
எது எப்படியானாலும் நல்லதொரு காமெடி
பத்திரிக்கைத் தர்மம் என்பார்களே ,அது என்னாச்சு ?இந்த பாவத்தை எந்த மகாமகக் குளத்தில் கரைப்பார்களோ :)
ReplyDeleteஎந்த யுத்தியையும் கடைப்பிடித்து பத்திரிக்கையை வளர்ப்பது தர்மத்தின் பாற்படும்.
ReplyDeleteசெய்திகளை இவர்களே உருவாக்குகிறார்கள்
ReplyDeleteநீங்கள் இன்னும் குமுதம் படிக்கிறீர்களா தோழர்?
ReplyDeleteALL done by Desk Reporters.....
ReplyDeleteபத்திரிக்கைகள் எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்குகிறார்கள்! இதை தெளிவுபடுத்திய உங்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஇன்னுமா மேஜர்தாசன் படங்கள்? ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் இனது விட்டதாக தவறாக செய்தி வெளியிட்ட செய்திப் பத்திரிக்கை அதற்கு அவர் வழக்குத் தொடுக்கப்போகிறேன் என்று பயமுறுத்தியதும் "வருந்துகிறோம்! அவர் இன்னும் சாகவில்லை" என்று மன்னிப்பு வெளியிட்டதாக ஒரு நகைச்சுவை உண்டு! அது நினைவுக்கு வருகிறது. கூடவே ஒரு பத்திரிகாதிபர் இறந்து விட்டதாக வரும் செய்தியை அவரே படித்து விட்டு வான் ஊர்தியில் தனது பத்திரிக்கை அலுவலகத்துக்குக் கிளம்பும் சுஜாதா கதையும்!
ReplyDeleteஇதென்ன அ'நியாயமாக இருக்கிறது. உங்களை யாரு ஊருக்கு முந்தி குமுதத்தைப் படிக்கச்சொன்னா. கொஞ்சம் நாள் பொறுத்திருந்து வாங்கிப்படிக்கக் கூடாதா? நீங்க அவசரக் குடுக்கையாகப் படித்துவிடுவீர்கள் என்று குமுதத்துக்குத் தெரியுமா? வாசகர்கள் முதலில், சினிமா, கிசுகிசு, நடிகைகளின் பேட்டிகள் போன்றவற்றைப் படித்துமுடித்துவிட்டு சாவகாசமாக இரண்டு நாள் சென்று படிப்பார்கள் என்று நினைத்து வெளியிட்ட கட்டுரையை, முதல்முதலில் படித்தது உங்கள் தப்பல்லவா?
ReplyDelete