Thursday, February 11, 2016

அப்பாவிற்கு சாயிபாபா, மகனுக்கு ரவிசங்கர்





மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திற்கு ரவிசங்கர் சாமியாரை அழைத்தது பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடப் பாரம்பரியத்தில் இப்படியா என்றெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் அதிசயிக்கவோ, இல்லை அதிர்ச்சியடையவோ ஏதும் இல்லை. ம்ஞ்சள் துண்டு மர்மமே அவர்கள் நீர்த்துப் போனதை சொல்லாமல் சொல்லும்.

தந்தை "சத்யசாயிபாபா" எனும் சாமியாரை வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தார் என்றால் மகன் "ரவிசங்கர்" எனும் இன்னொரு சாமியாரை அழைத்து வந்திருக்கிறார்.

இதிலே இந்த இரண்டு சாமியார்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருமே கொலை முயற்சிக்கு உள்ளானவர்கள். ஓடி ஒளிந்து கொண்டு தப்பித்தவர்கள். கொலைகாரனை தங்கள் சக்தி கொண்டு தடுக்க முயலாமல் "எல்லாம் மாயை" என்று அம்பலப் பட்டவர்கள்.

அப்படிப்பட்ட சக்தியில்லாத சாமியார்கள் தந்தைக்கும் தனயனுக்கும் எதை சாதிக்கப் போகிறார்கள்? 

3 comments:

  1. சரியான பதிவு இப்படிப்பட்ட மாயை சாமிகளை தான் தமிழக மக்கள் நம்புகிறார்கள். அவர்களை கவருவதற்காக தந்தையும் மகனும் சாமிகளுக்கு செம்பு தூக்கிறார்கள்.

    ReplyDelete
  2. எதை சாதிக்கப் போகிறார்கள்?////
    எல்லாம் தேர்தல் தான்....

    ReplyDelete
  3. எதை செய்தாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதுதான் தந்தைக்கும்
    மகனுக்கும் . அதற்க்குதான் அப்பா சாய்பாபாவை சந்தித்தார். மகன்
    ரவிசங்கருடன் சந்திப்பு.

    ReplyDelete