Wednesday, February 24, 2016

திமுக வின் ஜெமோ பாணி தமிழ்த்துரோகம்
திமுக வின் தேர்தல் விளம்பரங்கள்தான் சமூக வலைத்தளங்களின் புதிய பரபரப்பு. ஜெயலலிதா மீது விமர்சனம் வைத்திட வேண்டும் என்ற ஞானோதயம் இப்போதாவது திமுக விற்கு வந்தது மகிழ்ச்சி. ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி அளவிற்கு  ஜெ அரசை திமுக விமர்சிப்பதே இல்லையே என்ற புரிதலோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லாமல் கீழ்த்தரமான முறையில் மக்கள் நலக் கூட்டணி மீதான தங்கள் எரிச்சலை, வயிற்றெரிச்சலை உடன் பிறப்புக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

திமுக வின் விளம்பரம், அதற்கு அதிமுக வின் எதிர்வினை ஆகியவற்றை பார்க்கும் போது தேர்தல் நெருங்க நெருங்க இருவருமே தரம் தாழ்ந்து போவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு தவறான முன்னுதாரணத்தை திமுக உருவாக்கியுள்ளது.

மேலே உள்ளது திமுக நேற்று ஹிந்து நாளிதழில் கொடுத்துள்ள விளம்பரம்.

தமிழ் வாசகங்களை ஆங்கில எழுத்துருக்களில் (Fonts) கொடுத்துள்ளர்கள்.

இந்த விளம்பரத்தை அவர்களால் தமிழிலேயே கொடுத்திருக்க முடியாதா? எதற்கு ஆங்கில எழுத்துருக்கள்? ஆங்கிலத்திலேயே மொழி பெயர்த்துக் கூட விளம்பரத்தைக் கொடுத்திருக்கலாமே?

தமிழ் எழுத்துருக்கள் அவசியமில்லை, ஆங்கில எழுத்துருக்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெயமோகன் சொன்ன அபத்தமான ஆலோசனையை திமுக ஏன் பின்பற்றுகிறது? தமிழை கொல்லும் முயற்சியல்லவா இது? தமிழினக் காவலர் என்று சொல்லிக் கொள்பவர் இதை ஊக்குவிக்கிறாரா?

ஜெயமோகன் தனது அரிய ஆலோசனையைச் சொன்ன போது அவருக்கு எதிராக அப்போது வீரமாக பொங்கிய திமுக வலைத்தள போராளி மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டவர்கள் இதை மட்டும் ஆதரிக்கிறார்களா?

இந்த விளம்பரம் கண்டிப்பாக திமுக தமிழிற்கு செய்துள்ள துரோகம்.  

14 comments:

 1. ஐயா, இதே விளம்பரம் தமிழிலும் வந்துள்ளது.
  ஆங்கில நாளேட்டில் வந்ததுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள விளம்பரம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அதே தமிழ் விளம்ப்ரத்தை ஆங்கில நாளேட்டிலும் கொடுத்திருக்கலாமே. கவனத்தை கவருவது புதுமை என்றெல்லாம் நினைப்பு

   Delete
 2. நியாயமான கேள்வி. தமிழ் வாசகங்களை ஆங்கில எழுத்துகளில் ஏன் கொடுக்க வேண்டும்? தமிழிலேயே கொடுத்திருக்கலாம், அல்லது ஆங்கிலத்திலேயே மொழி பெயர்த்து கொடுத்திருக்கலாம்.தமிழ் மக்கள் தமிழைவிட ஆங்கிலத்தை தான் மிகவும் விரும்புவார்கள் என்பதால் அவர்கள் அப்படி செய்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 3. இவர்கள் இன்னும் கீழே போவார்கள்.....

  ReplyDelete
  Replies
  1. சென்று விட்டார்கள் என்பதே கீழேயுள்ள உடன்பிறப்பு ஒருவரின் பின்னூட்டமே நிரூபிக்கிறது

   Delete
 4. ஜெயாவுக்கு சொம்பு தூக்குற உண்டியல் குழுக்கி நாய்களுக்கு திமுக வை விமர்சிக்க என்னடா தகுதி இருக்கு ?
  ஜெயாவை காலை நக்கிட்டு இருக்,கிற நாய்கள் தானே நீங்களடா
  பொருக்கி நாய்களே

  அன்சாரி முகம்மது

  ReplyDelete
  Replies
  1. பொதுவாக அநாகரீகமான பின்னூட்டங்களை நான் அகற்றி விடுவேன். திமுக ஆட்களின் தரம் எப்படி கேவலமாக உள்ளது என்பதற்கு உதாரணம் உங்களின் பின்னூட்டம்.அது அப்படியே இருக்கும், உடன்பிறப்புக்களின் நாகரீக சிதைவுக்கு அடையாளமாக

   Delete
 5. உலக விபச்சாரி ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக தனிகட்சி போட்டு தேர்தலில் நிற்கும் கம்யூனிச நாய்களே
  அதிமுக வை விமர்சித்தால் எதுக்கடா நீங்க துள்ளுறீங்க
  .

  அன்சாரி முகம்மது

  ReplyDelete
  Replies
  1. போதையில்தான் எப்போதும் இருப்பீர்களா அன்சாரி முகமது? நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை போலும். என் கேள்விக்கு முதல் சொல்லுங்கள், உங்கள் போதை தெளிந்து நிதானமாக இருக்கும் போது

   Delete
 6. This is the advertisement , advertisement policy is catching words only.

  ReplyDelete
  Replies
  1. அப்ப தமிழிற்காகவே நாங்கள் வாழ்கிறோம் என்று சொல்லச் சொல்லாதீங்க

   Delete
 7. லக்ஷன் பரணீதரன்February 25, 2016 at 3:01 PM

  அது ஏங்க டிரேடு யூனியன் மக்களுக்கு கருணாநிதி சொன்னாலும் புடிக்கமாட்டேங்கிது. ஜெயமோகன் சொன்னாலும் புடிக்கமாட்டேங்கிது? யாரு சொன்னா உங்களுக்குப் புடிக்கும்?

  ReplyDelete
  Replies
  1. உருப்படியானதை ரெண்டு பேருமே சொல்ல மாட்டேங்கறாங்களே

   Delete
 8. சுமி சுமா , அன்சாரி மொகமத் , அபு ராயன் , போன்ற ஒரு சிலர் தான் உடன்பிறப்புகளில் அநாகரீகமாக பேசுபவர்கள் .. ஆனால் பெரும்பாலானோர் நாகரீகமாக பேச கூடிய உடன் பிறப்புகளே
  எடுத்து காட்டாக யுவ கிருஷ்ணா , டான் அசோக் , உமா மகேஸ்வரன் போன்றவர்களை சொல்லலாம்
  தனியாக போட்டி இடுவதால் பொது உடமை போராளிகள் மீது பல உடன்பிறப்புகள் வார்த்தைகளை கொட்டி இறைக்கலாம் . ஆனால் திமுக வுக்கு என்றைக்குமே பொது உடமை போராளிகள் தான் நண்பர்கள் என்பதை உடன் பிறப்புகள் என்றைக்கும் மறக்க கூடாது .
  தனியாக போட்டி இடுவது என்பது ஒரு கட்சியின் உரிமை . அதை இவர்கள் எப்படி கேள்விக்கு உள்ளாக முடியும் ?

  ReplyDelete