Tuesday, February 2, 2016

தண்ணி மேல இல்லை, தண்ணிப் பாலம்







இன்று வாட்ஸப்பில் வந்த புகைப்படங்களை பார்க்கும் போதே பிரமிப்பாக இருந்தது.

ஒரு தொழில்நுட்ப அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெர்மனி இதை நிகழ்த்தியுள்ளது. ஆறு மீது பாலம், கடல் மீது பாலம், கடலுக்கடியில் சுரங்கம், நீர்வழிப் போக்குவரத்து என்பதையெல்லாம் கடந்து விட்டது இது.

நீர்வழிப் போக்குவரத்துக்காக பாலம் கட்டி அதிலே தண்ணீரை நிரப்பி படகு அல்லது சிறு கப்பல்களை விடுவது என்பது ஒரு சாதனைதான்.

இதைப் பார்க்கிற போது நிச்சயமாக பெருமூச்சு வருகிறது.

தொழில்நுட்பம் இப்படியெல்லாம் சென்று கொண்டிருக்கிற போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

இருக்கிற நதிகளையெல்லாம் வறண்டு போகச் செய்து மணல் கொள்ளைக்கு வழி விட்டுள்ளோம்!

இயற்கையே பெரு மழை வாயிலாக நதிகளை நிரம்பச் செய்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் அத்தனை நீரையும் கடலுக்கு அனுப்பிடுவோம்.

அது மட்டுமா, கோடிக்கணக்கில் ஒரு திட்டம் தீட்டி தொடங்கினாலும் இந்த இடத்தில் ஒரு கற்பனைப்பாலம் இருந்தது என்று சொல்லி “நம்பிக்கை”யின் அடிப்படையில் அந்த திட்டத்தையே தடுத்திடுவோம்!

என்ன செய்ய? அடுத்தவர்களின் சாதனையைப் பார்த்து பெருமூச்சு விடத்தான் நம்மால் முடியும்!

பின் குறிப்பு : இந்த தண்ணீர்ப் பாலம் பற்றி விபரங்கள் அறிந்து கொள்ள இணையத்தில் தேடிய போது வெட்கமாகப் போய் விட்டது. இந்த பாலம் 2003 ம் ஆண்டே திறக்கப்பட்டு விட்டதாம். இது கூட தெரியவில்லையே என்று கொஞ்சம் அசிங்கமாக உள்ளது. இது மட்டுமல்ல, இது போல வேறு சில பாலங்களும் உள்ளது என்பதையும் அறிந்து கொண்டேன். 

மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ள இந்த இணைப்பிற்குச் செல்லவும்

2 comments:

  1. 2003ஆம் ஆண்டிலேயேவா
    இந்தியாவின் நிலையினை நினைத்தால் வெட்கமாகஇருக்கிறது நண்பரே

    ReplyDelete
  2. இதைப் பார்க்கிற போது நிச்சயமாக பெருமூச்சு வருகிறது.
    தொழில்நுட்பம் இப்படியெல்லாம் சென்று கொண்டிருக்கிற போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

    மிகவும் சரியாக சொன்னீர்கள். வெட்கபடவேண்டியது மக்களும் தான்.

    ReplyDelete