Sunday, February 14, 2016

"அம்மா" ஒரு நாள் தூங்கினார்




சென்னை வெள்ளம் பற்றி சட்டப் பேரவையில் பேசினோம். நாங்கள் பேசுவதை எதையும் காது கொடுத்து கேட்க அமைச்சர்கள் தயாராக இல்லை. செம்பரப்பாக்கம் திறந்து விடப்பட்ட விஷயம் குறித்து விவாதிக்க அரசு பயப்படுகிறது. விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். ஏன் மறுக்கிறார்கள்? என்ன காரணம் என்பதை தெரிந்து கொண்டால்தானே எதிர்காலத்தில் இது போல நிகழாமல் தடுக்க முடியும்? 

முப்பதாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதுதான் சென்னை பேரழிற்குக் காரணம். முன் கூட்டியே பல நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியும். ஏன் செய்யவில்லை?

வழக்கம் போல "அம்மா" தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி நிலைமையைச் சொல்ல யாருக்கும் தைரியமில்லை.

சுப்ரபாதம் சொல்லி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி கடவுளையே எழுப்புகிறார்கள். ஆனால் இந்த அம்மாவை எழுப்ப யாருக்கும் தைரியம் இல்லை.

அவர் ஒரு நாள் நிம்மதியாக தூங்கினார். 

அதன் விளைவு என்னாயிற்று?

சென்னை மக்கள் முப்பத்தி ஐந்து நாட்களுக்கு தங்கள் தூக்கத்தை இழந்தார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------

பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் வாட்ஸப்பில் ஒரு ஜோக் வந்தது.

"முருகா! என்னே உன் லீலை! சுப்ரமணிய சாமி மூலம் போட்ட வழக்கை குமாரசாமி மூலம் முடித்து விட்டாயே! 

---------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று வேலூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தோழர் அ.சவுந்தரராஜன் பேசியதிலிருந்து.

இன்னும் பல சுவாரஸ்யமான, முக்கியமான விஷயங்களோடு நாளை.

 

 

2 comments:

  1. நாளைக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. அம்மா தான் தூக்கம், பதிவு சுவரசியம்.

    ReplyDelete