பைத்தியம் முற்றி விட்டது.
எங்கும் எதிலும் தங்கள் தலைவியின் படத்தை அச்சடிக்க வேண்டும் என்ற வெறி தலைக்கேறி விட்டது.
"அவர்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் திருமணம். அதிலே அவர்கள் தலைவியின் படத்தை போடுகிறார்கள். உனக்கென்ன வந்தது?" என்று நடுநிலைமையாளர் என்ற போர்வையில் உலா வரும் அம்மா அடிமைகள் கண்டிப்பாக கேள்வி கேட்பார்கள்.
இதெல்லாம் என்ன அதிமுககாரர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த காசா என்ன?
ஊழல் செய்து, ஊரை அடித்து உலையில் போட்ட காசுதானே?
இப்படி எங்கும் எதிலும் அம்மா படம் என்பதெல்லாம் ஜெ மீதான பாசமோ, மரியாதையெல்லாம் கிடையாது. இப்படியெல்லாம் செய்து அவரை மனம் குளிர வைத்து மீண்டும் மக்களை சுருட்டுவதற்கான வாய்ப்பு பெறத்தான்.
தாலியிலும் ஜெயலலிதா படத்தை பொறிக்காததுதான் நிஜமான அதிசயம்!
இந்தமாதிரிச் செய்கின்ற அல்லக்கைகளைத் துரத்தவேண்டும். இதிலும் ஜெ. படத்தைப் பொறித்து, அவருக்குப் பெருமையில்லாமல் சிறுமையைச் சேர்த்த அந்த அல்லக்கைகளை என்ன செய்தாலும் தகும். இப்படியெல்லாம் செய்தால், எப்படி ஜெவின் மனதைக் குளிரவைக்க முடியும்? அவ்வளவுகூட சிந்திக்கத் தெரியாதவரா முதல்வர்?
ReplyDeleteஊழல் செய்த பணத்தில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் மணமக்கள் தலையில்.அந்த மணமக்கள் ரொம்ப பாவம். அம்மா அல்லது தாயின் மாநிலம் உலக புகழை பெறுகிறது.
ReplyDeleteநார்சிசம் முற்றிவிட்டது! இதெல்லாம் பார்த்தால் வெறுப்பு தான் வரும் என்ற அளவு கூட தெரியாத முட்டாள்களா அந்தக் கட்சியினர்? இவர்களை ஜெ தண்டிக்காத பட்சத்தில், இது மேலும் மேலும் வளரும்! நல்ல வேலை. அவர் படத்தை மணமக்கள் நெற்றியில் பச்சை குத்தாமல் போனார்களே!
ReplyDeleteஇன்று அதிமுக நிர்வாகிகள் இல்லத்திருமணங்களை ஜெயலலிதா நடத்தி வைத்திருக்கிறார். அதிமுக நிர்வாகிகள் மிக பெரிய பணவசதி கொண்டவர்கள் என்பதினல் அவர்கள் வீட்டு மணமக்கள் தலையில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டபடவில்லை. ஆனால் ஏழைகள் என்றால் அதிமுகவினருக்கு இழிவு. ஏழை மணமக்கள் தலையில்யில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி மனிதர்களை கேவலபடுத்தியிருக்கிறார்கள்.
ReplyDelete