Monday, February 8, 2016

ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

தன்னுடைய எழுத்துக்களால் சிறுபான்மை மக்கள் மீதும் இடதுசாரிகள் மீதும் விஷத்தை கக்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிற, "பாரத ரத்னா, ஞான பீட விருது" கனவிலிருந்த நேரத்தில் அற்ப "பத்மஸ்ரீ" கொடுத்ததால் அதை நிராகரித்த கொள்கை வீரர் ஜெயமோகனுக்கு நண்பர் கனவுப் பிரியன் முக நூலில் எழுதிய பகிரங்கக் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



 
'' கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்ப நண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது ''
.------- எழுத்தாளர் ஜெயமோகன்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்று அபுதாபி தமிழ் சங்கத்தின் முக்கிய பதவியில் இருக்கும் வயது மூத்த நண்பர் ஒருவரை சந்தித்து நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிட்டியது.
அவர் நாகர்கோவிலை சேர்ந்த நாடார். ( இந்த வார்த்தையை உங்களுக்காக இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.)

நீண்ட காலமாக ஏர் இந்தியாவில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவரை ஒரு மருத்துவமனை மேனேஜராக சேர்த்து இன்னும் அவரை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது. 

எனக்கு லேசான இருமலுடன் கூடிய காய்ச்சல் அதனால் அவர் இருக்கும் மருத்துவமனை சென்றிருந்தேன். நீண்ட நாட்களாக பார்க்காத அவரையும் சந்தித்து விட்டு வரலாம் என்று எண்ணி. 

அவர் ஒரு என்சைக்ளோபீடியா. (உங்களுக்கு எல்லாம் அப்பன் அவரு. என்ன, அவரு எழுதுறதில்ல அவ்வளவு தான். )

கக்கன் காலம் தொட்டு காங்கிரசில் இருந்து வெளியே வந்த மண்டல் வரை வந்து, முப்தி முஹம்மது செய்யதுக்கு சென்று வி.பி.சிங் தாண்டி ராஜாஜி காலத்தில் சபாநாயகராக இருந்த பிற்படுத்தப்பட்ட நபர் வரை பேசி தீர்த்தார். 

குமரி ஆனந்தன் பற்றியும் மொழிப்போர் தியாகிகளுக்கான கோட்டாவில் டாக்டர் சீட் பெற்ற தமிழிசை பற்றியும் பேச்சு வந்தது. 

கூடவே கண்ணதாசன் பாடல் எழுதக்கூடாது என மறுத்த எம்ஜியாரிடம் " சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிழலா " எனும் வரிகளை எல்லாம் சுட்டிக்காட்டி " பேசுவது கிளியா பாடலை சேர்த்த கதை கூறி வாலி, நா.காமராசன். புதுமைபித்தன், ஆலங்குடி சோமு என வலம் வந்து 

டைகர் வரதாச்சாரி படத்தில் பிராமணராக நடித்த பிராமண குலத்தை சேர்ந்த சுந்தரராஜன் நீரை வாய் வைத்து குடித்ததையும் கௌரவம் படத்தில் பிராமணர் அல்லாத சிவாஜி அவர்கள் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வர, வீட்டின் உள்ளே வந்து " ஜலம் கொண்டாடி " என அண்ணாந்து குடித்ததையும் சுட்டிக்காட்டி சிவாஜி இறந்த போது சுஜாதா குமுதத்தில் எழுதிய " அந்த கண்ணீரில் உண்மை இருந்தது " என்ற வரிகளோடு முடித்தார். 

ப.சிதம்பரத்தின் மாமனார் பற்றி திருவிதாங்கோடு மஹாராஜாவின் முன் கைகட்டி நின்ற பழைய நாடார் சமூகம் பற்றி பிஹார் பற்றி, இப்பொழுதே இந்த நிலை, முப்பது நாற்பது வருடங்கள் முன் எப்படி அடிமைத்தனம் செய்திருப்பார்கள் என வருந்தி ஈ.வே. ராமசாமி என்ற ஒரு ஆள் உண்டாக்கிய சமூக மாற்றம் பற்றி. 

நான் யார் நான் யார் நான் யார் நாலும் தெரிந்தவன் யார் யார் என்ற எம்ஜியார் பாடலை நடு ரோட்டில் வைத்து எழுதியது பற்றி 

14 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை நிர்மாணிக்கும் தகுதி இருந்தும் ஒரு சீட்க்கு அல்லாடும் முஸ்லிம் சமுதாயம் பற்றி, 

கத்தோலிக்க கல்லூரிகளில் இன்னும் ஊழல் இல்லாமல் இருப்பது பற்றி
லயோலா கல்லூரியில் பிறர் விசுவல் கம்யூனிகேசன் படித்த போது சூர்யாவுக்கு மட்டும் B.Com சீட் கொடுத்தது பற்றி, 

நடிகர் ஜெயசங்கரின் நிறைவேறாத காதல் பற்றி, அந்த சிவகாமி மகனிடம் (காமராசர் ) சேதி சொல்லடி சேரும் ( காங்கிரஸில் ) நாள் பார்க்க சொல்லடி என பாடல் பற்றி

இப்படி அவர் பேசியதை சொல்லிக்கொண்டே போகலாம் இன்னும் ஏராளமாய். என் நினைவில் உள்ளதை கொஞ்சமாய் இங்கே குறிப்பிட்டுள்ளேன். 

ரெண்டு மணி நேரம் பேசிக்கொண்டே இருந்தார் என்னுடன். ஏன் தெரியுமா..?

முஸ்லிமாகிய எனக்கு காய்ச்சல் என்பதால் நாடாராகிய அவர் வீட்டில் அரிசி கஞ்சியும் ரசமும் திடீர் என அவர் மனைவி தயாராக்க ரெண்டு மணி நேரம் தேவைபட்டதால். அதுவும் வெளிநாட்டில். 

அவ்வளவு சீக்கிரம் மதம் என்னும் சொல்லால் மக்களை பிரித்து விடலாம் என எண்ண வேண்டாம். 

மதம் எனும் தீமூட்டி குளிர்காய்ந்த, இப்பொழுது அதே கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தும் காணாமல் போன அத்வானியின் புகைப்படம் இருந்தால் அடிக்கடி பார்த்துக் கொள்ளவும்.

பின் குறிப்பு : ஜெயமோகன் மிகப் பெரிய எழுத்தாளர் என்று சொல்லப் பட்டாலும் அவர் சிந்தனைகளில் எப்போதுமே அவர் சிறியவர் என்பதால்   அவர் படத்தை சிறியதாகவே போட்டுள்ளேன். 

7 comments:

  1. எழுத்தாளனில் அடி முட்டாள்கள் இருக்காங்களா? அதுக்கு ஒரு உதாரணம்?னு கேட்டால்...
    நம்ம "ஜெயமோவன்" தான் எனக்கு ஞாபகம் வருவார். He hardly understands "humanity" and "friendship" have nothing to do with religious bullshit! What an idiot he is!!

    ReplyDelete
  2. Hindu and Muslim, lower and upper caste, rich and poor: all are human being; all are one species. Nothing difference exist. Except some fanatics who thinks that they are superior elephant shit!!

    ReplyDelete
  3. //கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்ப நண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது ''//

    இது அந்த ஆளுக்கு,
    நீயெல்லாம் ஏதாவது தெரிஞ்சு தான் எழுதிறியா, இல்ல, சும்மா யாருக்காச்சும் சொரிஞ்சு விடுறியா? எந்த குடும்ப நண்பன் வந்து ஓங்கிட்ட அப்டி சொன்னான்?
    எங்கூர்ல கோயில் கும்பாபிசேகத்துக்கு பள்ளிவாசலேர்ந்து சீர் எடுத்துக்கு போறதும், கோயில்லேர்ந்து பள்ளிவாசலுக்கு விசேச நாளுல சீர் எடுக்குறதும் நடந்துகிட்டு இருக்கு. நீ என்னமோ கல்யாணத்துக்கு போறத பத்தி பேசுற.

    அதான் ஒன்னையெல்லாம் ஒரு எழுத்தாளன்னு ஒத்துகிட்டு மத்தீல இருந்து ஏதோ குடுக்குறேன்னு சொன்னாங்கல்ல, பேசாம வாங்கிக்க வேண்டியது தானே, இன்னும் ஏன் சும்மா கூவிக்கிட்டே இருக்கே, பெருசா வேற ஏதும் எதிர்பாக்குரியா?

    ReplyDelete
  4. //கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்ப நண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது ''//

    எந்த ஊரில் இருக்கான் இந்த ஆளு ??? இன்னும் எங்கள் ஊரில் இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பியாக மாமன் மச்சான் முறை சொல்லி அழைப்பதுண்டு. எங்க ஊருக்கு அருகே தேவர் நாயக்கர் கோனார் பிள்ளை தலித் மற்றும் அணைத்து சாதிகளும் நிறைந்த இந்து மக்கள் உள்ளனர் . இவனைப்போல சில ஒன்று இரண்டு காவிகளும் உள்ளனர். அவர்களை மற்ற இந்து மக்களே ஒதுக்கி வைத்துள்ளார்கள். முஸ்லிமாகிய எனது வீட்டு திருமணத்திற்கு இந்து நண்பர்களுக்கு அழைப்பிதல் கொடுத்தேன் எனது வீட்டு திருமணத்தில் அனைத்து இந்து மத மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவனைப்போன்றவர்கள் குழப்பம் விளைவிக்காமல் இருந்தால் சரி.

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
  5. உங்க நண்பர் கனவுப்பிரியன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்,மனிதபண்புக்கே முன்னுரிமை வழங்குபவர்,பிற மக்களோடு இணைந்து வாழ விரும்பும் ஒரு இஸ்லாமியர், இவர் போன்ற நல்லவர்கள் பலர் இஸ்லாமிய மதத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை மத துரோகிகள் (தமிழ் இன துரோகிகள் என்று சீமான் சொல்வது போல் ) என்றும், ஈமான் இல்லாதவர்கள் என்றும் வசைபாடவும் ஒரு பெரும் மதவாத கூட்டம் உள்ளது. அவர்கள் இப்படியான நல்லவர்களை வெறுக்கிறார்கள்.

    ReplyDelete