Friday, February 19, 2016

அலிபாபா குகைக்குள் திமுக





ஆரம்பத்தில் திமுக என்னவோ மாநில சுயாட்சி, மாநிலங்களை வதைக்கும் மத்தியரசு என்றுதான் பேசிக் கொண்டிருந்தார்கள். டெல்லிக்கு செல்வது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கள்வர்களின் குகைக்குள் இருந்த செல்வங்களைப் பார்த்து அதிசயப்பட்ட அலிபாபா போல ஆச்சர்யப்பட்டு விட்டார்கள். ஆஹா பணம் செய்ய இத்தனை வாய்ப்பிருக்கிற போது இத்தனை நாள் நழுவ விட்டு விட்டோமோ என்று அசந்து போய் விட்டார்கள்.

அதன் பின்பு மத்திய சர்க்காரில் துண்டு போட்டு உட்கார்ந்து விட்டார்கள். தேவே கௌடா, குஜ்ரால் போய் வாஜ்பாய் வருகிறாரா, பஹூத் அச்சா என்று சொல்லி மந்திரியாகி விட்டார்கள். அடுத்து மன்மோகன்சிங் வந்தாரா, பஹூத் பஹூத் அச்சா என்று சொல்லி மறுபடியும் உட்கார்ந்து விட்டார்கள், இப்போது பாஜக மீண்டும் வந்து விட்டதா, அதற்கும் சலாம் போட தயாராக உள்ளார்கள்.

எல்லாம் பணம் செய்யும் வேலை. நெடுஞ்சாலைத் துறையில் அடித்த பணம், கப்பல் துறையில் அடித்த பணம், என்ன இந்த ஸ்பெக்ட்ரம் விஷயத்தில்தான் கொஞ்சம் கூட நெப்பே இல்லாமல் ஓவராக அடித்து மாட்டிக் கொண்டு விட்டார்கள். நீதி மன்றமே இதற்கு வழக்கு போடாமல் இருக்க முடியாது என்ற அளவிற்கு அடித்து விட்டார்கள்.

டெல்லிப் பக்கம் போனால் தமிழ்நாடு என்றாலே அலறுகிறார்கள். பாலு, ராசா, அன்புமணி பெயரைக் கேட்டாலே பயந்து போகிறார்கள்.

தமிழ்நாட்டை திறமையாக ஆளக் கூடிய தகுதி உள்ளவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே.

இதை சொல்வது யார்?

அவரது அப்பா டாக்டர் ராமதாஸ் மட்டுமே.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயாவது கல்லா கட்டுவது என்ற இலக்கோடு செயல்பட்டவர் அவர். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் அவருக்கு கப்பம் கட்ட வேண்டும். இதுதான் திறமையாக ஆள்வதற்கான தகுதி போல.


ஞாயிறன்று வேலூரில் நடைபெற்ற
தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்
பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
தோழர் அ.சவுந்திரராஜன் பேசியதிலிருந்து

1 comment:

  1. vijayakanth ஒரு ஊழல் கட்சிக்கு பதிலாக இன்னொரு மாபெரும் ஊழல் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இவர் உதவமாட்டார் என்று நம்புகிறோம்.
    மக்கள் நல கூட்டணி பக்கம் சென்றால் கொஞ்சம் மக்கள் ஆதரவு
    இருக்கலாம்.

    ReplyDelete