Tuesday, February 2, 2016

பிரிவினை கேட்கிறதா மோடியின் மாநிலம்?

உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில பாஜக அரசிற்கு பலத்த குட்டு ஒன்று வைத்துள்ளது. ஜனநாயகத்திற்கும் அதற்கும் தொடர்பு கிடையாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.



முழுமையான விபரங்கள் கீழே

குஜராத் இந்தியாவில் இல்லையா? நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமலாக்காதது ஏன்?

 உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி


புதுதில்லி, பிப்.1-
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைஉறுதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு மிகச் சரியாக 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில்,இந்தச் சட்டத்தையும், உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழை - எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை உறுதி செய்யும் சட்டங்களை பாரதிய ஜனதாகட்சி ஆளும் குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எந்தவிதத்திலும் அமல்படுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.இதுதொடர்பான வழக்கு ஒன்றை திங்களன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றாமல் குஜராத் போன்ற மாநிலங்கள் செயல்படுகின்றன என்றால், அவை என்ன நாடாளுமன்றத்திற்கும் மேலானவையா என்று கடுமையான விமர்சனத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இடதுசாரிகளின் மகத்தான சாதனை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2006ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்திய கிராமங்கள் விவசாயம் அழிந்து கொடூரமான வறட்சியின் பிடியிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றன என்றும், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்றும் உண்மைகளை விளக்கி, அப்போதைய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் கடும் நிர்ப்பந்தம் செய்து, கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையையும், கூலியையும் உத்தரவாதப்படுத்தும் விதத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை நிறைவேற்ற வைத்தனர்.

இடதுசாரிகளின் இந்த மகத்தான சாதனையின் விளைவாகவே கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய கிராமப்புறங்களை வறுமை இன்னும் முழுமையாக தின்று தீர்க்காமல் மிச்சம் வைத்திருக்கிறது.ஆனால், முதலில் இதை நிறைவேற்ற மறுத்த காங்கிரஸ் கூட்டணி அரசு, பின்னர் இந்தச் சட்டத்தையும், திட்டத்தையும் தனது மிகப் பெரும் சாதனையாக கூறிக் கொண்டது. எனினும், படிப்படியாக இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தது. அதை எதிர்த்தும் இடதுசாரிகள் நாடு முழுவதும் மிகப் பெரும் போராட்டங்களை நடத்தினர். இன்றளவும், தமிழகத்திலும், நாட்டின் பல பகுதிகளிலும் இத்திட்டத்தில் கூலி குறைப்பு, வேலைநாள் குறைப்பு, சட்டவிதிகளை அமலாக்காத நிலைமை என பல்வேறு விதிமீறல்கள் நடப்பதை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளும், அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவின் சாதனை

வீதிகளில் இறங்கி போராட்டம் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடக்கும் திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் இத்திட்டத்தை அமலாக்கியது மட்டுமல்ல, நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தையும் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை கொண்டு வந்த ஒரே அரசு திரிபுராஇடது முன்னணி அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.இதெல்லாம் நடந்த போது, தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை மிகவும்
கீழ்த்தரமாக விமர்சித்த கட்சி பாஜக. 60 ஆண்டு களில் வறுமையை ஒழிக் காத காங்கிரஸ், இந்த திட்டத்திலும் தோல்வி அடைந்துவிட்டது என்று,நரேந்திரமோடி பிரத மராக பதவியேற்ற புதிதில்ஏளனமாக பேசி னார். 

பின்னர் கிராமப்புறங் களில் இந்த திட்டத் திற்கு இருக்கும் முக்கியத் துவத்தை அறிந்த பின்னர், நாடாளுமன்றத்திலும் தனது முதல் பட்ஜெட்டில் வேறுவிதமாக பேசினார். ‘இத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று நினைக்கிறீர்களா? அதை அனுமதிக்கமாட் டேன். நீங்கள் 60 ஆண்டு களில் வறுமையை ஒழிக்கவில்லை. ஆனால் நான், ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டத்துடன் இத்திட் டத்தை வெற்றிகரமாக அமலாக்குவேன்’ என்று மோடி பேசினார்.மோடி அரசின் மோசடிஆனால் அப்படி பேசிக் கொண்டே, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு இத்திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டை மிகக் கடுமை யாக வெட்டியது மோடி அரசு. அதற்கு எதிராக திரிபுரா அரசு தொடர்ந்து தனது போராட்டத்தை நடத்தி வருகிறது.

இந்தப் பின்னணியில் பிப்ரவரி 2 செவ்வாயன்று தேசிய கிராமப்புற வேலைஉத்தரவாதச் சட்டம் நிறைவேறி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், மோடி அரசு திங்களன்று ஒரு அறிக்கை வெளியிட் டுள்ளது. அதில் இத்திட் டத்தை தேசத்தின் பெருமிதம் என்று குறிப்பிட் டுள்ள மோடி அரசு, நாடு முழுவதும் இத்திட்டத்தை கடந்த ஒரு ஆண்டில் தொய் வின்றி செயல்படுத்திவிட்ட தாகவும், எதிர்காலத்தில் அனைத்து ஏழை களுக்கும் இதன் பலன் சென்றடையும் விதத்தில் வேலை பெறும் நடை முறைகளை எளிமைப் படுத்த விருப்பதாகவும் கூறியுள்ளது.


உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி விட்டதாக மோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ள அதே வேளையில், பாஜகஆளும் குஜராத் உள் ளிட்ட மாநிலங்களில் இத்திட்டமும், உணவுப் பாதுகாப்புச் சட்டமும், மதிய உணவுத் திட்டமும் அமல்படுத்தப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிர தேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா,ஜார்க்கண்ட், பீகார், ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக வும், ஆனால் அம்மாநிலஅரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நிவார ணம் வழங்கவில்லை என் றும் ஸ்வராஜ் அபியான் என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந் திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மதன்பி.லோகுர் தலைமை யிலான அமர்வு, “நாடாளு மன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது. குஜ ராத், இந்தியாவில் தானே இருக்கிறது? தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுமைக்குமானது. அதை குஜராத் அமல்படுத்தாது ஏன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.மேலும், நாளை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பீகார்சொல்லலாம்;
இதரமாநிலங்கள் இந்திய தண்ட னைச் சட்டத்தையோ அல்லது நாடாளுமன்றம் நிறைவேற்றிய இதர சட்டங்களையோ அம லாக்கமாட்டோம் என்றுசொல்லலாம். இதை ஏற் புடையதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.வறட்சி பாதித்துள்ள மாநிலங்களாக மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் மாநிலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, மதிய உணவுத் திட்டம் போன்றவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற தகவல் களை ஒருங்கிணைத்து வரும் 10-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்“ எனவும் அறிவுறுத்தினார்.

மனுவின் விவரம் என்ன?

ஸ்வராஜ் அபியான் தாக்கல் செய்திருந்த மனுவில், “வறட்சியால் பாதிக் கப்பட்ட மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் 5 கிலோ உணவு தானியம் வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு கூடுதல் தானி யங்களும், சமையல் எண் ணெய்யும் வழங்கிட மாநிலஅரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட வேண்டும்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால், முட்டை வழங் கப்பட வேண்டும். பயிர் இழப்பீடுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கால்நடை தீவணங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை உறுதி வழங்கவேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

மேலும், “வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தங் களது கடமையை நிறைவேற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம்காட்டியதால் அம்மாநிலங்களில் மக்கள் வாழ்வாதா ரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் மெத்தனத்தால் அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவுகள்21, 14-ன் கீழ் வழங்கப் பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளன” என அம்மனு வில் கோரப்பட்டிருந்தது.ஸ்வராஜ் அபியான் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜ ரானார்.


நன்றி தீக்கதிர் 02.02.2016

No comments:

Post a Comment