Sunday, February 28, 2016

உங்கள் புத்திதான் சில்லறைத்தனமானது மிஸ்டர்


வழக்கம் போல நாடாளுமன்றத்தில் வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கும் திருவாளர் மோடி, கர்னாடகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சில்லறைத்தனமான விஷயங்களுக்காக பிரச்சினைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வீரம் காட்டியுள்ளார். 

அப்படியென்ன சில்லறைத்தனமான பிரச்சினைகள்?

எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள், நீங்கள் ராமரின் பிள்ளையா? முறை தவறி பிறந்தாயா என்று ஒரு அம்மையார் கேட்டதை கண்டித்தால்,

மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி ஒரு முதியவரின் உயிரை ஏனய்யா பறித்தீர்கள் என்று கேட்டால்,

யாரும் எதுவும் வாய் திறந்து பேசக்கூடாது, பேசினால் வெளியே போ எனச் சொல்கிறீகளே, இது என்ன ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா என்று வினவினால்,

இந்தியாவின் வளங்களையெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொட்டிக் கொடுக்கிறீர்களே, இது தேசத்துரோகமில்லையா என்று எதிர்த்தால்,


இந்தியர்கள் ஒவ்வொருவருவருக்கும் பதினைந்து லட்ச ரூபாய் தருவோம் என்று சொல்லி விட்டு அது சும்மா என்று இப்படி ஏமாற்றுவது நியாயமா என்று குரலெழுப்பினால்

உங்கள் அமைச்சர் பெருமக்கள் இருவரால் ரோஹித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தூக்கிலே தொங்கினாரா, அந்த கருணை உள்ளங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று குமுறினால்,

புகழ் பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தை உங்களின் அடியாட்கள் ஏ.பி.வி.பி, ஏவலாட்கள் காவல்துறை மூலம் நாசமாக்க முயல்வது அயோக்கியத்தனமில்லையா என்று போராடினால்

அதுவெல்லாம் உங்களுக்கு சில்லறைத்தனமான விஷயமாக தெரிகிறது. 

மிஸ்டர் மோடி, உங்களது புத்தியும் நடவடிக்கைகளும்தான் சில்லறைத்தனமானது என்பது எப்போதுதான் உங்களுக்குப் புரியும்?

 

 

3 comments:

  1. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. சிந்திக்க வைக்கிறது தங்களின் இப்பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. இன்று பட்ஜெட் கூட்டத்தில் பார்த்தேன்..அப்படி ஒரு அமைதி..மேசையை தட்டுவதில் தமிழ்நாட்டை வென்றுவிட்டார்..

    உங்கள் எழுத்து சிலசமயம் எரிகிறது...

    ReplyDelete
  3. டிகார்பியோ-க்கு அவார்ட மாத்தி குடுத்துட்டாங்களோ?!

    ReplyDelete