Saturday, February 20, 2016

ஜெ மட்டுமா, அவங்களும்தான் நடிச்சாங்க





வரவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பற்றி பேசினால் அதிமுககாரர்களுக்கு கோபம் வந்துடும். குமாரசாமி தீர்ப்பு கொடுத்து விட்டார். அவருக்கு வருமானத்திற்கு மேல சொத்து இருக்கா என்று விசாரிக்கனும்.

எங்க அம்மா சினிமால நடிச்சாங்க, நடனமாடினாங்க. அதனால அவங்களுக்கு சொத்து இருக்கு என்று அதிமுககாரர்கள் பேசுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் ஜெயலலிதா மட்டும்தான் சினிமால நடிச்சாங்களா? நடனம் ஆடினார்களா?

இந்த அஞ்சலி தேவி, சாவித்திரி, கே.ஆர்.விஜயா – இவங்க எல்லாம் சினிமாவில் நடிக்கவில்லையா, நடனம் ஆடவில்லையா? இவர்களுக்கெல்லாம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கா? அப்போ அவர்கள் சினிமாவில் சம்பாதிக்கவில்லையா? சொல்லப் போனால் பல நடிகைகள் கடன் தொல்லையால் அவதிப்பட்டதையும் வறுமையில் சிரமப்பட்டதையும் நாம் அறிவோம்.

இந்த ஆட்சியில் எல்லா திட்டங்களுக்கும் அம்மா பெயர்தான். அம்மா உணவகம், அம்மா உப்பு, என்று எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைக்கிறார்கள். ஆனால் டாய்லெட் கட்டி அதற்கு மட்டும் "நம்ம டாய்லெட்" என்று பெயர் வைக்கிறார்கள்.

சட்டப் பேரவையில் தினம் ஏதாவது ஒரு பிரச்சினை செய்து எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பி விடுகிறார்கள். பிறகு ஆளும் கட்சிக்காரர்கள், அம்மா, ஆத்தா, மாரியாத்தா, காளியாத்தா, சமயபுரத்தா என்று போற்றி போற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். 

ஐம்பது வருடம் கழித்து யாராவது அவைக்குறிப்புகளை படித்தால் "அம்மாவை போற்றுவதுதான் சட்டமன்றத்தின் வேலை" என்று நினைத்துக் கொள்வார்கள். 

ஞாயிறன்று வேலூரில் நடைபெற்ற
தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்
பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
தோழர் அ.சவுந்திரராஜன் பேசியதிலிருந்து









1 comment:

  1. இவங்களுக்கு கோடிக்காணக்கான சொத்து இல்லை, காரணம் அதிகாரத்திற்கு வந்து ஊழல் செய்து இவர்கள் சம்பாதிக்கவில்லை.

    ReplyDelete