முப்பத்தி ஒன்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு அது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தவர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி. அவசர நிலைக்கால அராஜகங்களுக்குப் பின்பு நடந்த பொதுத்தேர்தலில் அவர் தோற்றுப் போனாலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தார்.
அவர் அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலமாக அவரது வீட்டிற்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். முதலில் அவரது எடுபிடிகள் வருகின்றனர். பிறகு இந்திரா காந்தியே வருகிறார்.
அவர் ஏன் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட மனுவை மாணவர் சங்கத் தலைவர் படிக்கிறார். முதலில் புன்னகையோடு அதை கேட்ட அம்மையார் மனுவில் அவர் நிகழ்த்திய குற்றங்களை பட்டியல் போட்டு மாணவர் சங்கத் தலைவர் படிக்கவும் விளக்கவும் செய்வதைக் கேட்க பொறுக்காமல் வீட்டிற்குள் ஓடி விட்டார்.
அவர் போன பிறகும் ஆர்ப்பாட்டம் ஆவேசமாக தொடர்ந்தது. அவர்கள் கொண்டு வந்த மனுவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.
அம்மையார் மறுநாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது உறுதி மிக்க போராட்டத்தால் அன்று இந்திரா காந்தி அம்மையாரை அதிர வைத்த அந்த மாணவர் சங்கத் தலைவர் யார் தெரியுமா?
அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பிரச்சினைக்காக இன்று மோடி அரசால் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ள அதே
தோழர் சீத்தாராம் யெச்சூரி தான்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர்.
அருமை தோழர் ...வரலாற்றுப்பதிவு...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉண்மையைச் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதா அனானி. இந்தியாவின் இன்றைய சீர்கேட்டுக்கெல்லாம் தொடக்கமே அந்த அம்மையார்தானே. சொந்த அடையாளத்தில் எழுத முடியாத நீரெல்லாம் அம்மையாரின் துணிச்சல் பற்றி எழுத வந்து விட்டாய். உமது புத்தி சொறி பிடித்து நாறுகிறது
Deletegood move by BJP government.
ReplyDeleteஉம்மையும் ஒரு நாள் அடித்து உள்ளே தூக்கிப் போடும் போது கதறப் போகிறீர்கள் மிஸ்டர். அப்போதும் உங்கள் உரிமைக்காக கம்யூனிஸ்டுகள்தான் குரல் கொடுப்பார்கள்
Delete