Wednesday, February 3, 2016

அந்த அரபிக் கடலோரம்




கேரளப் பயணம் முடிந்து பல நாட்களாகி விட்டது. ஆனாலும் பகிர்ந்து கொள்ள நினைத்த பல விஷயங்கள் பாக்கி இருக்கிறது. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில விஷயங்கள் உங்களோடு.

கொச்சின் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிற முக்கியமான ஒன்று சீன மீன்பிடி வலைகள்.



பார்க்க அழகாக இருந்தாலும் வலையில் சிக்கும் மீன்களின் அளவு என்னமோ குறைவாகத்தான் இருக்கிறது. ஒரு பத்து பேர் ஒரு வலையில் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு முறை கிடைக்கக் கூடியதோ கைப்பிடி அளவை விட கொஞ்சம் அதிகம். அவ்வளவுதான்.

வருமானம் போதாத காரணத்தால் பலரும் இத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறிக் கொண்டிருப்பதாக ஒருவர் சொன்னார்.

இருப்பவர்களையாவது தக்க வைக்க கேரள அரசு ஏதாவது செய்ய வேண்டும். சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிற வருமானத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சரிதானே நான் சொல்வது?


2 comments:

  1. நீங்க சொன்னது முற்றிலும் சரி. தொழிலுக்கு மீன்கள் குறைவாக கிடைக்கின்றது என்பதிற்காக அயல்நாடுகளுக்கு சென்று மீன்களை களவாடவா முடியும்! இது மாதிரி பிரச்சனைகளில் வருமானத்திற்கு மாற்று ஏற்பாடுகள் மக்கள் நலனை கவனிக்கும் அரசுகள் செய்து கொடுப்பது உலகில் நடைபெற்று வருகிறது.
    இயற்கை வளங்களை பாதுகாப்பது என்ற அடிப்படையில் அரசு மீன்பிடி பெரும் முதலாளிகளுக்கு கட்டுபாடு விதித்து, கண்காணித்திருந்தால் சாதரணமாக மீன்பிடி தொழில் செய்பவர்களுக்கு இந்த நிலமை வந்திருக்காது.

    ReplyDelete