Friday, March 29, 2019

பரிசுப் பெட்டி கொடுத்து பரிசுப் பெட்டி ?????



தேர்தல் ஆணையம் அடிப்படையில் மோடி ஆணையமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆனால் அவர்கள் மற்ற கட்சிகளுக்கும் அவர்கள் உதவக் கூடிய நல்ல மனது கொண்டவர்கள் என்பதன் அடையாளமாக டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக “பரிசுப் பெட்டி” அளித்துள்ளது.

எவ்வளவு பொருத்தமான சின்னம்!

பரிசுப் பெட்டிகள் எந்த வடிவிலும் இருக்கலாம்!
பரிசுப் பெட்டிக்குள் எந்த விதமான பரிசும் இருக்கலாம்!
பரிசுப் பெட்டிகளின் அளவு மாறுபடலாம்!
பரிசுப் பெட்டிகளின் மதிப்பு மாறுபடலாம்!
பரிசுப் பெட்டிகளுக்குள் காந்தி நோட்டுக்களையும் வைக்கலாம்.

ஆக வெரைட்டி, வெரைட்டியாக யோசித்து பரிசைக் கொடுப்பதற்கு வசதியான சின்னத்தை கொடுத்துள்ளார்கள்.

பரிசுப் பெட்டியை பெற்றுக் கொண்டு பரிசுப் பெட்டியை அளித்திருப்பார்களோ?




2 comments:

  1. பரிசுப் பெட்டியில் வாக்காளர்களுக்கு பரிசு மழைதான்

    ReplyDelete
  2. அம்மா கொள்ளையடிச்ச காசை அமமுக அள்ளி விடப் போகுது

    ReplyDelete