Wednesday, March 6, 2019

ரபேல் - இந்த “திருட்டும் நல்லது”


திருடியதால் அம்பலமானதோ திருட்டுத்தனம்?


ரபேல் விமான பேர ஊழல் தொடர்பான விபரங்களை ஹிந்து நாளிதழில் தவணை முறையில் வெளியிட வெளியிட மோடி வகையறாக்கள் அலறுகிறார்கள்.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் திருட்டு போய் விட்டது. அதை வைத்துக் கொண்டு வெளியாகும் விபரங்களை உச்ச நீதிமன்றம் பொருட்படுத்தக் கூடாது என்று அழாத குறையாக மன்றாடியுள்ளார் அரசு தலைமை வழக்கறிஞர்.

பத்திரிக்கையில் வெளியாகும் தகவல்கள் பொய் என்று பொய்யாகக் கூட அரசால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இப்போது வந்துள்ள தகவல்களே ரபேலில் ஊழல் நடந்துள்ளது. சின்ன அம்பானிக்கு உதவுவதற்காகவே கூடுதல் விலை கொடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை எந்த ஒரு வங்கி  பிணையும் இல்லாமல் பிரதமர் அலுவலகம் ரகசிய பேச்சு வார்த்தை தனியாக நடத்தி உருவாக்கியது என்பது தெளிவாகி விட்டது.

ஊழலற்ற நேர்மையான அரசு என்ற பிம்பத்தை உருவாக்க முயன்றாலும் ரபேல் தாக்குதல் அதை தகர்த்து விட்டது.

திருட்டு என்று அரசு புலம்புகிறது.

சர்ஃப் விளம்பரம் சொல்கிறது

“கறை நல்லது”

பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்திய

இந்த  “ திருட்டும் நல்லது”


இதுவும் ஒரு வகை தேச பக்திதான் . . .

6 comments:

  1. இவங்களே பெரிய திருட்டு பசங்க. இவங்க அடுத்தவங்களை திருடன்னு சொல்றாங்க

    ReplyDelete
  2. Rajendiran, chennaiMarch 6, 2019 at 10:20 PM

    Super Comrade.

    ReplyDelete
  3. காங்கிரஸ் இல்லையேல் பிஜேபி என்று இரு வாய்ப்புகள் தான் உள்ளது. இதில் எது பெரிய ஊழல் கட்சி?

    ReplyDelete
    Replies
    1. பாஜகவின் சித்தாந்தங்களும் நடைமுறைகளும் காங்கிரஸை விட அபாயகரமான கட்சி என்பதை மோடியின் ஆட்சிக்காலம் நிரூபித்து விட்டது.

      Delete
  4. But, still i believe modi.

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் நீங்கள் மோடியை நம்பினால்?
      May the God (whom I don't believe) save you

      Delete