Saturday, March 16, 2019

இது கூட தெரியலையா யுவர் ஆனர்

கீழடி வழியாய் முதல் வெற்றி
===========================
“கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் நிறைவடையும்போது தமிழர்களின் பெருமையை உலகமே அறிந்துகொள்ளும். இந்நிலையில் மத்திய அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை.”

இந்திய தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு வார காலத்திற்குள் அவரை மறுபடியும் கீழடிக்குக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு வெள்ளியன்று (மார்ச் 15) ஆணையிட்டது.

பண்பாடு, வரலாறு இரண்டையும் ஆக்கிரமிக்க நடந்த சூழ்ச்சிக்கு விழுந்த முதல் அடி! மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், கீழடி மீட்புப் போராட்ட வேள்பாரியுமான சு.வெங்கடேசன் வெற்றிக்கு முன்னுரையாய் ஒரு தீர்ப்பு!

மேலே உள்ளது தீக்கதிர் பொறுப்பாசிரியராக இருந்த தோழர் அ.குமரேசன் அவர்களின் முக நூல் பதிவு.

இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியதை கீழே கொடுத்துள்ளேன்.

தமிழர்களின் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தை விட தொன்மையானது. அந்த காலகட்டத்தில் எந்த மத அடையாளமும் கிடையாது. இதுதான் கீழடி சொல்கிற உண்மை. இதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்பதுதான் மத்தியரசின் சதி.

இந்த சதியைக் கூட நம் நீதியரசர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?


1 comment:

  1. அவங்களுக்கு தெரியும். ஆனா உங்களை மாதிரி வெளிப்படையா சொல்ல முடியாதே

    ReplyDelete