Tuesday, March 12, 2019

மாலை மலர் வக்கிரத்தை கண்டிப்போம்

மாலை மலர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள விளம்பர சுவரொட்டி படு கேவலமாக உள்ளது. 

பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள் போல. இப்படிப்பட்ட மோசமான தலைப்புக்கள் வைப்பதில் தின மலரோடு மாலை மலர் போட்டி போடுகிறது போல.

அந்த அராஜகக் கும்பலின் செயலுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல மாலை மலரின் தலைப்பு.

இதனைக் கண்டித்து மாலை மலர் ஆசிரியருக்கு 

editor@maalaimalar.com 

என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நான் அனுப்பிய மின்னஞ்சல் கீழே உள்ளது.

மாலை மலர் செய்தது தவறென்றால் நீங்களும் உங்களது கண்டனத்தை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். 







பெறுனர்

ஆசிரியர்,
மாலை மலர் நாளிதழ்,
மதுரை

மாலைமலர் ஆசிரியர் அவர்களுக்கு,

உங்கள் நாளிதழின் இன்றைய விளம்பர சுவரொட்டி கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

பொள்ளாச்சியில் ஒரு அராஜகக் கும்பலால் பல பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கும் மிரட்டலுக்கும் உட்பட்ட கொடூர சம்பவம் தமிழக மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதை தாங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணையாக நிற்க வேண்டிய ஒரு பொறுப்பான ஊடகம், அந்த பெண்களை இழிவு படுத்தக் கூடிய விதத்தில் விளம்பர சுவரொட்டியில் தலைப்பு அளித்துள்ளது மிகவும் மோசமான செயல்.

பத்திரிக்கை விற்பனைக்காக இப்படிப்பட்ட மலிவான உத்திகளை பயன்படுத்தியுள்ள உங்கள் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புள்ள பெரிய மனிதர்கள், அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்ற குரல் உரக்க ஒலிக்கும் வேளையில் அதனை திசை திருப்பும் முயற்சியோ என்றும் சந்தேகப்படுகிறேன்.

உங்களது செயலை வன்மையாகக் கண்டிப்பது மட்டுமல்லாமல், அதற்காக தாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இனி இது போல செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும்
வலியுறுத்துகிறேன்.

இவண்

எஸ்.ராமன்,
வேலூர்

4 comments:

  1. கண்டத்திற்குரிய தலைப்பு

    ReplyDelete
  2. பணத்திற்காக எதையும் செய்யத் துணிவார்கள். ஊடக தர்மம் மீறப்படுவதை பொறுக்க முடியவில்லை.

    இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு?
    https://newsigaram.blogspot.com/2019/03/election-india-vote-post1.html
    #தேர்தல் #இந்தியா #நாடாளுமன்றம் #பாஜக #காங்கிரஸ் #அதிமுக #திமுக #ஜெயலலிதா #சட்டமன்றம் #வாக்கு #வாக்காளர் #உரிமை #அரசியல்

    ReplyDelete
  3. கண்டிக்கப்பபடவேண்டிய விஷயம்.

    ReplyDelete
  4. THE PRESS ESPECIALLY MALAIMALAR SHOULD NOT BEHAVE LIKE THIS .THEY ARE ACTING AGAINST THE NORMS OF THE
    FIFTH ESTATE

    ReplyDelete