Wednesday, March 6, 2019

தமிழகத்தில் மோடி - ஓவர் நக்கலப்பா . . .



இப்போதெல்லாம் மோடி போகிற இடத்தில் எல்லாம்  ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஆலைகளை, திட்டங்களை இவர் இப்போது புதிதாக திறந்து வைப்பது போல சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த போக்கு தொடருமானால் இன்று சென்னையில் மோடி எவற்றையெல்லாம் திறந்து வைப்பார் என்று வழக்கறிஞர் தோழர் பிரதாபன் நேற்று முகநூலில் பல பதிவுகள் எழுதியிருந்தார்.

அவை அனைத்தையும் தொகுத்து உங்களுக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கடைசி நிகழ்ச்சி சூப்பர்.

பார்த்து ரசியுங்கள். அதற்கு முன்பாக 

#GoBackModi



நாளை தமிழகம் வரும் மோடி வண்டலூரில் விலங்கியல் பூங்காவை திறந்துவைக்கிறார்.
இது முன்பு 1985 ல் துவக்கப்பட்டிருந்தாலும், நாளையும் துவக்குவார்.
#GoBackModi

நாளை மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி, மெரினா பீச்சை திறந்துவைத்து நாட்டிற்கு அர்பணிக்கிறார்!
#GoBackModi

நாளை நண்பகல் 12 மணியளவில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை திறந்தவைத்து மோடி விழா பேருரை நிகழ்த்துவார்.
சட்டப்பேரவைக்குள் என் கால் செருப்புக்கூட போகாது என வாக்குறுதி அளித்துள்ள பெரிய டாக்டர், நாளைக்கு ஷு போட்டு செல்வதாக உளவுத்துறை தகவல்!
#GoBackModi

நாளை சென்னை வரும் மோடி, எமி வில்கின்சன்- பரிதி தம்பதியர் படகில் பயணம் செய்ய கூவம் நதியை நாட்டிற்கு அர்பணிப்பு செய்கிறார்.
#GoBackModi

நாளை காலை 6 மணிக்கு வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாகிரகத்தை மோடி துவக்கிவைக்கிறார்.
#GoBackModi

இரவு 10 மணிக்கு சென்னை -திருச்சி மலைக்கோட்டை ரயிலை துவக்கி வைக்கிறார் மோடி!
New Tamilnadu Born என ரஜினி டிவிட்டியுள்ளார்.
#GoBackModi

நாளை சென்னை வரும் மோடி இடைப்பட்ட நேரத்தில் ரஜினி எனும் புதுமுகம் நடிக்கும் பைரவி எனும் படத்தை துவக்கிவைக்கிறார்.
#GoBackModi

நாளை மாலை 4 மணிக்கு தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என புதிய பெயரை மோடி சூட்டி, தலைமைச்செயலகத்தை திறந்துவைக்கிறார்.
#GoBackModi

நாளை மாலை 3 மணியளவில் மோடி எல்.ஐ.சி கட்டிடத்தை திறந்துவைப்பார்.
#GoBackModi

காலை 11 மணிக்கு ராயப்பேட்டை சென்று, அங்கு தற்போது விலைக்கு வாங்கப்பட்ட கட்சிக்கு, அடிமை திமுக என்று பெயர்சூட்டுவிழாவை மோடி சிறப்பிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ராயபுரம் டைசனின் புதிய டால்ஃபின் குட்டிக்கும் பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
#GoBackModi

நாளை காலை 9 மணிக்கு மோடி அண்ணா சாலையை திறந்து வைப்பார். கார் டயர்கள் சகிதமாக இரட்டையர்கள் பங்கேற்பார்கள் என அறிவிப்பு!
#GoBackModi

நாளை காலை 7:30 மணிக்கு சென்னை விமானநிலையத்தை மோடி அவர்கள் திறந்துவைக்கிறார்.
#GoBackModi

நாளை எனக்கு பிரதாபன் என பெயர் சூட்ட இருக்கும் மோடிக்கு நன்றிகள்!
என்னை வாழ்த்துங்கள் பிரண்ட்ஸ்...
#GoBackModi

3 comments:

  1. அருமை தோழர்....

    ReplyDelete
  2. We can really enjoy the humour in it with a pain about the nation.

    ReplyDelete
  3. யாருங்க அவரு பிரதாபன் ஜெயராமன்?
    எனக்கே அவரை பார்க்கனும் போல இருக்கு,
    சிரிச்சு முடியல

    ReplyDelete