Monday, March 11, 2019

நெப்போலியனை மிரள வைத்த மோடி

வாட்ஸப்பில் வந்ததை தமிழ்ப்படுத்தி பகிர்ந்து கொண்டுள்ளேன். சில பெயர்கள் மட்டும் என்னுடைய இடைசெருகல். 



மீண்டும் உயிர் பெறுகிற நெப்போலியன் அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய மூன்று நாடுகளுக்குச் செல்கிறார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சென்று 

"உங்கள் நாட்டில் உள்ள ராணுவ உபகரணங்களும் பயிற்சியும் இருந்திருந்தால் நான் வாட்டர்லூ போரில் தோற்றிருக்கவே மாட்டேன்"

என்று சொல்கிறார்.

இஸ்ரேல் பயணத்தை முடித்து விட்டு அந்நாட்டு பிரதமர் நெதன்யாஹூவைப் பார்த்து

"மொஸாத் மாதிரியான ஒரு அமைப்பும் உங்களைப் போன்ற உளவு, ஒற்றர் வேலைகளில் திறமையும் இருந்திருந்தால் நான் வாட்டர்லூ போரில் தோற்றிருக்கவே மாட்டேன்"

என்று சொன்னார்.

இறுதியாக இந்தியப் பயணத்தை முடித்து விட்டு மோடியிடம் சென்று தலை வணங்கி

"தலைவா! உங்க நாட்டில இருக்கிற மாதிரி அர்ணாப், மாலன் மாதிரியான பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சி சேனல்களும் இருந்திருந்தா, நான் வாட்டர்லூ போரில் தோற்று விட்டேன் என்று இந்த நொடி வரை உலகத்துல ஒத்தனுக்கும் தெரிஞ்சிருக்காது. நீதான் எனக்கு குரு"

என்று சொல்லி விட்டுப் போனாராம் . . .

No comments:

Post a Comment