ஓஹி
புயல் தாக்குதலுக்கு உள்ளான குமரி மாவட்டத்து பழங்குடி மக்களுக்கு தென் மண்டல இன்சூரன்ஸ்
ஊழியர் கூட்டமைப்பும் நெல்லைக் கோட்டச்சங்கமும் செய்த நிவாரண உதவிகள் பற்றி முன்பே
பதிவிட்டிருந்தேன்.
படிக்காதவர்களுக்காக
இணைப்பு இங்கே உள்ளது.
ஓஹி
புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு
உதவுவதற்காக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக ரூபாய் மூன்று லட்சமும்
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சமுமாக ஐந்து
லட்ச ரூபாய்க்கான காசோலை இன்று கேரள மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தோழர் டி.பி,ராமகிருஷ்ணன்
அவர்களிடம் எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் அவர்களால்
வழங்கப்பட்டது. தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் பி.பி.கிருஷ்ணன் (கோழிக்கோடு கோட்டச்சங்கத்தின்
பொதுச்செயலாளரும் கூட) கோழிக்கோடு கோட்டச்சங்கத்தின் தலைவர் தோழர் பிஜூ ஆகியோரும் உடன்
இருந்தனர்.
ஒரு
கேள்வி எழலாம்.
கேரளாவில்
அரசிடம் பணத்தை அளித்துள்ளீர்கள், தமிழகத்தில் நேரடியாக பயனாளிகளிடம் நிவாரணப் பொருட்களை
அளித்துள்ளீர்களே என்று ஒரு கேள்வி எழுந்தால் அது இயல்பானது.
பதில்
மிகவும் சுலபமானது.
கேரள
இடது முன்னணி அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி சென்று சேர்வதை உறுதியாகச் செய்யும்.
தமிழக
அரசின் மீது அந்த நம்பிக்கை கிடையாது.
காரணம்
இவர்கள்
ஸ்டிக்கர் ஒட்டிகள்
//ஸ்டிக்கர் ஒட்டிகள்// - நச்
ReplyDeleteகடைசி வார்த்தை செம பஞ்ச்
ReplyDeleteநீங்களும் 'பஞ்ச'ர்.
ReplyDelete