Monday, December 18, 2017

அம்மணி, அது பொதுத்தேர்தல் . . .




தமிழிசை அம்மையார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு உள்ளானானேன்.

"இரண்டு மாநிலங்களிலும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  எங்களின் சக்தி இரட்டிப்பாகி உள்ளது"

அம்மையாருக்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது.

குஜராத்திலும் ஹிமாச்சலப்பிரதேசத்திலும் நடைபெற்றது இடைத் தேர்தல் அல்ல. அந்த மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுள்காலம் முழுமையாக முடிந்து அனைத்து தொகுதிகளுக்கும் நடைபெற்ற பொதுத்தேர்தல்.

கங்கை அமரன் ஒளிந்து கொள்ள கரு.நாகராஜனை நீங்கள் நிறுத்தி உள்ளீர்களே, ஆர்.கே.நகர் தொகுதியிலே, அங்கே நடக்கவுள்ளதுதான் (ஒரு வேளை நடந்தால்)  இடைத் தேர்தல்.

குஜராத்திலே உங்கள் சக்தி குறைந்து போயிருக்கிறதே தவிர இரட்டிப்பாகவில்லை. அதற்கே மோடியார் தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

இடைத்தேர்தலுக்கும் பொதுத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்க எல்லாம் ஒரு மாநிலத்தலைவர்!!!!

என்ன செய்ய, மோடி கட்சியில அவரை மாதிரிதானே எல்லோரும் இருப்பீங்க!

 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete