உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்ளிட்டோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது ஜாதிய ஆணவக் கொலைகள் நிகழ்த்தும் அராஜகவாதிகளுக்கு எதிரான நல்ல துவக்கம்.
சங்கரின் கொலைக்கு காரணமான கௌசல்யாவின் தாய் குற்றவாளி என்றாலும் விடுவிக்கப்பட்டது சரியில்லை. அதற்கு எதிராக தான் மேல்முறையீடு செய்யப்போவதாக தோழர் கௌசல்யா கூறியுள்ளது பாராட்டத்தக்கது.
தோழர் கௌசல்யாவின் எதிர்கால கல்விச்செலவை நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று அறிவித்து அதற்கான நிதியையும் அதன் மூலம் அவருக்கு நம்பிக்கையையும் அளித்த கோவைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்திற்கும் பாராட்டுக்களை தெரிவிக்கும் நேரம் இது.
அரசியலில் முகவரியை இழக்கும் நேரத்தில் அதனை தக்கவைக்க தர்மபுரியில் வெறியாட்டம் நடத்திய பாமக தமிழகத்தில் ஆணவக் கொலைகள் மீண்டும் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறந்திடக் கூடாது.
கௌசல்யாவிற்கு இருந்த துணிவு திவ்யாவிற்கு இருந்திருந்தால் ஒருவேளை இளவரசனின் மரணம் கூட நிகழ்ந்திருக்காதோ என்ற சிந்தனை வருவதை தவிர்க்க இயலவில்லை.
ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராக உறுதியோடு போராடி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சிகளை, அதற்காக ஒரு தனிச்சட்டம் வேண்டுமென்ற நடைப்பயணத்தை எல்லாம் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
மரண தண்டனை அவசியமா என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் ஜாதிவெறியில் மூழ்கிப்போனவர்களின் அராஜகச் செயலுக்கு சவுக்கடி என்ற விதத்தில் இத்தீர்ப்பு முக்கியமானது. வரவேற்கத்தக்கது.
கொலையாளிகள் தன் பெற்றோர் என்ற போதிலும் அவர்களுக்கு எதிராக உறுதியோடு போராடிய தோழர் கௌசல்யாவின் உறுதி பாராட்டத்தக்கது.
பி.கு : படம் தோழர் வெண்புறா சரவணன். நன்றி தோழரே
பி.கு : படம் தோழர் வெண்புறா சரவணன். நன்றி தோழரே
கௌசல்யாவுக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி
ReplyDeleteதீர்ப்பு வந்தவுடன் எழுதப்பட்டவைகளை வாசிக்கவில்லை போலும். அதாவது, அந்த வீடியோ மட்டும் இல்லையென்றால் சாட்சிகள் இல்லாமல் (ஒருவரும் பயந்து முன்வரமாட்டார்கள்; அல்லது பயமுறுத்தப்பட்டு பிறழ்சாட்சிகளாகி விடுவர்) சாட்சியங்கள் அழிக்கப்பட்டும் இவ்வழக்கு நீரில் வரைந்த கோலமாக முடிந்திருக்கும். வீடியோவே பெரும்பங்காற்றியது. எடுத்தவருக்கே முதல் நன்றிகள் உரித்தாகவேண்டும்.
Deleteஆம். உண்மைதான்.
Deleteகாவல்துறையின் கண்காணிப்பு வீடியோ அது. பெரும்பாலான இடங்களில் அது செயல்படாது. இங்கே முறையாக பராமரித்தவர் எவரோ, அவருக்கும் நன்றி.
டோலர் மரண தண்டனையை ஆதரிக்கின்றாரா ? எதிர்க்கின்றாரா ?
ReplyDeleteஅல்லது
செலெவ்டிவ் ஆதரவு
பாலியல் வன்புணர்ச்சி, ஜாதிய ஆணவக் கொலைகள் போன்றவைக்கு மரண தண்டனை கொடுத்தால் தவறில்லை என்பதே என் கருத்து.
Delete"தோழர்" என்ற உன்னதமான வார்த்தையை நையாண்டியாக "டோலர்"
என்று அழைத்து அந்த உணர்வையும் தமிழையும் கொலை செய்பவர்களுக்குக் கூட
கடுமையான தண்டனை தகும்.
"பாலியல் வன்புணர்ச்சி, ஜாதிய ஆணவக் கொலைகள்"
ReplyDelete.
இவை இரண்டும் மட்டும் தானா ... வேறு லிஸ்ட் உண்டா ?
இந்த தமிழ்க்கொலை பற்றி பதில் சொல்லாமல் பதுங்கியது ஏனோ?
Deleteஇவ்விரண்டிற்கும் தக்க தண்டனைகள் அளிக்கப்படும்போது லிஸ்ட் கிட்டத்தட்ட காலியாகிவிடும். ஆம், இக்குற்றங்கள் பல குற்றங்களுக்கு வழிகாட்டி.
Deleteதன் ஜாதி உயர்ந்தது என கற்பனையான திமிருக்கு இத்தீர்ப்பு ஒரு முடிவு. இனி தூக்கிலேறவேண்டியதுதான் என நினைப்பு இருந்தால். மகள் இன்னொருவனை மணந்தால், வழக்காடுமன்றம் செல்வார்கள்; இன்னபிற சரியான வழிகளைத்தேர்ந்தெடுத்து முடிவைத் தேடுவார்கள். கூலிப்படையை வைத்து போட்டுவிட்டால் மகள் வந்துவிடுவாள்; இன்னொருவனை (தன் ஜாதிக்காரனைத்தான்!) ஏமாற்றி அவன் தலையில் கட்டிவிடலாமென தப்புக்கணக்கு போட மனம் வராது இல்லையா நிலவழகன் சுப்பையா?
கூலிப்படைக்கு கூலிப்படையே தீர்வு என்று போயிருக்க முடியும். ஆனால் அப்படி போகாமல்கா திருப்பூர் நீதமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்தார்கள் பாருங்கள் அது நீங்கள் எப்படி வாழவேண்டும் என்ற பாடம். கற்றுக்கொள்ளுங்கள்
Because of her romance her father and brother have to be hanged. Because of her feelings her mother supposed to be hanged. Because of a girl's urge the whole family has to be destroyed. Because of these kinds of incidents the newborn baby girls are 'finished' in southern districts of tamilnadu. For your kind information the honor killings are happen in the same caste also due to economic indifference (poor boy run away with a rich girl of the same caste and ultimately killed by girl’s parents). If it is happens with different castes then there is anarchy in the society. If we people gives importance to basic instinct, then the homosexual, incest and mistress have to be appreciated.
ReplyDeleteகடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான சிந்தனை
DeleteNo Anonymous! Not because of her romance; her elopment; her basic instinct, the parents and the hired killers are going to hang. It is only because the parents thought foolishly that if they eliminate the boy hacking him to death using hired killers, they could bring back their girl and remarry her within caste. So, it is murder, not romance; not basic instinct. If your daughter elope with a guy beneath your level and caste, brutally killing him is ISI way. It cannot be justified. It is not allowed in our country. We are civilised people. If you don't want to be civilised i.e. you will kill people for a purpose like marriage - your place is Syria.
DeleteWhy the anani keep saying because of her Romance? What is wrong in that? when all the men stand naked every one look same. We are not separated by color, we are all same but separated by caste. Let her mom also should be hanged with out any hesitation. I feel really sorry for Iavarsan, a innocent boy killed mercilessly by coward politicians.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநீங்க இன்னும் லிஸ்ட் தரலையே
ReplyDeleteதிரு நிலவ்ழகன் சுப்பையா,
ReplyDeleteதோழர் என்ற வார்த்தையை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதால் உங்கள் பின்னூட்டத்தை நீக்குகிறேன். உங்களுக்கு பதிலும் அவசியமில்லை என்றே கருதுகிறேன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏண்டா அனாமதேயம்,
Deleteஅசிங்கமா திட்டறது கூட புதுசா எதுவும் யோசிக்க மாட்டியா?
அவ்வளவுதான் உன் கட்சியில சொல்லிக் கொடுத்திருக்காங்களா?
இல்லை உன் மூளை அவ்வளவுதானா?
இல்லை அவங்க போடற எலும்புத்துண்டுக்கு இது போதும்னு
முடிவு பண்ணிட்டியா?
ஜாதிய ஆணவ கொலைகாரர்களால் கௌசல்யா அவர்களுக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு என்பது ஒரு போதும் ஈடு செய்யமுடியாது. அப்படி ஒரு கொடூரம் செய்து விட்டு கொலைகாரர்கள் தப்ப முடியாது என்பதை இந்திய நீதி உணர்த்தியுள்ளது மிகவும் மகிழ்சியை தருகிறது. இந்தியாவில் என்றால் என்ன கொடுமையும் செய்யலாம்,அதுவும் அப்பா மகளுக்கு உணவு கொடுத்தார், உடையும் வாங்கி கொடுத்தார்,அப்பாவின் அடிமையாக இருக்க வேண்டிவள் பெண் இப்படி சிந்திக்கும் மகான்களை கொண்ட ஒரு சமுதாயத்தில்.
ReplyDelete//கௌசல்யாவிற்கு இருந்த துணிவு திவ்யாவிற்கு இருந்திருந்தால் ஒருவேளை இளவரசனின் மரணம் கூட நிகழ்ந்திருக்காதோ என்ற சிந்தனை வருவதை தவிர்க்க இயலவில்லை.//
நிகழ்ந்திருக்காதோ என்றில்லை தலைவரே! கௌசல்யாவிற்கு இருந்த துணிவில் 100 ஒரு பங்காவது திவ்யாவிற்கு இருந்திருந்தால் இளவரசனின் மரணமே நிகழ்ந்தே இருக்காது.
கௌசல்யாவின் மேல் உள்ள உயர் மதிப்பு மேலும் அதிகமாகிறது. அவரை தமிழர்கள் எவ்வளவும் பாராட்டலாம்.
மரண தண்டனை அவசியமா என்றால் தற்போதைய நவீன காலத்தில் மரண தண்டனையை அனுமதிக்க கூடாது. நிராகரிக்க வேண்டும்.
ஜாதிவெறி கொலைகள் செய்பவர்கள், பாலியல் கொடுமைகள் செய்பவர்களுக்கு 80 ஆண்டுகள் 100 வருடங்கள் சிறை தண்டணை வழங்கபட வேண்டும்.