பாலிசிதாரர்களின் சேவையில் என்றும் முன் நிற்பது எல்.ஐ.சி மட்டுமே என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.
ராஜஸ்தானில் கொல்லப்பட்ட மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் திரு பெரிய பாண்டியன் அவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தில் இரண்டு பாலிசிகள் எடுத்திருந்தார்.
அந்த இரண்டு பாலிசிகளுக்கான இறப்புக் கேட்புரிமத்தொகையை அவரது மனைவி திருமதி பானுரேகா அவர்களிடம் காசோலை மூலமாக இன்று காலையே எல்.ஐ.சி சென்னை நகரக்கிளை 31 ன் ஊழியர்கள், அதிகாரிகள் ஒப்படைத்து விட்டனர். அப்போது அவரது உடல் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் எல்.ஐ.சி மட்டுமே என்பது இன்னும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி யை சீர்குலைக்க தொடர்ந்து முயலும் மோடி, ஜெய்ட்லி வகையறாக்களின் மோசடி வேலைகள் முறியடிக்கப்படும்.
well done
ReplyDeleteஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சென்னை நகரக் கிளைக்கும், அதில் பணி புரியும் ஊழியர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
ReplyDelete