திரைப்பட
டைட்டிலில் பெயர் போடுகிற போது ஒரு சண்டைப் பயிற்சியாளருக்கு திரை அரங்கில் முதன் முதலில்
கரவொலி எழுந்துள்ளது என்றால் அது அவருக்குத்தான்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சில பொதுக்கூட்டங்கள் குடியாத்ததில் நடைபெற்றுள்ளபோது முதல்
வரிசையில் அவர் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளேன். ஆனால் அறிமுகம் கிடையாது.
தலைநகரம்
திரைப்படத்தில் அவர் கொடூரமான வில்லன்.
இப்போது
யார் என்று யூகித்திருப்பீர்கள்.
ஆம்.
திரு ஜூடோ ரத்னம்.
இல்லையில்லை
தோழர் ஜூடோ ரத்னம்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தோழர் ஜூடோ ரத்னம் அவர்கள்தான் குடியாத்ததில்
நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாவட்ட மாநாட்டில் செங்கொடியை
அவர்தான் ஏற்றி வைத்தார்.
அப்போது
அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புகைப்படமும்
எடுத்துக் கொண்டேன். மிகவும் இனிமையான மனிதராக இருந்தார்.
கை
குலுக்குகையில் மனதுக்குள் கொஞ்சம் அச்சம் இருந்தது. நீண்ட கால ஸ்டண்ட் மாஸ்டராயிற்றே,
முரட்டுக் கரமாக இருக்கும் என்ற அச்சம்தான். மாறாக மிருதுவான கரமாக இருந்தது கொஞ்சம்
ஆச்சர்யம்தான்.
பின்
குறிப்பு : மாநாட்டை துவக்கி வைத்து பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன்
தோழர் ஜூடோ ரத்னத்தை உதாரணமாகச் சொல்லி பேசிய ஒரு கருத்து சுவாரஸ்யமானது. அதை நாளை
பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment