Thursday, December 7, 2017

சாணக்ய ஜிஎஸ்டி, மனு தர்ம உலக மயம்







இன்றைய ஹிந்து நாளிதழில் வெளிவந்த ஒரு தகவல். 




பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் எம்.ஏ அரசியல் வரலாற்றுப் பாடத்தில் கேட்கப்பட்டுள்ள இரண்டு கேள்விகள்.

சாணக்யர் தனது அர்த்த சாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி பற்றி  எழுதியதை விளக்கவும்.

உலகமயம் பற்றிய முதல் சிந்தனையாளர் மனு என்பதை விளக்கவும்.


சாணக்யர் காலத்தில் ஜி.எஸ்.டி இருந்ததா?
மனுதர்மத்தில் உலகமயம் பற்றியெல்லாம் எழுதப்பட்டுள்ளதா?

இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளை  தயாரித்தது யார்?
அதன் உள்நோக்கம் என்ன?

என்று விசாரணை நடத்திட வேண்டும்.


1 comment:

  1. என்ன அண்ணே இப்படி கேட்டுபுட்டீங்க, இந்து பல்கலைகழகத்தில் உலகின் முதல் விமானம் நம் கடவுள்கள் சென்ற புஷ்பக விமானம் என்றும், உலகின் முதல் அணுகுண்டு பிரம்ம அஸ்திரம், உலகின் முதல் உடலுறுப்பு மாற்றம் வினாயகருக்கு பொருத்திய யானை தலை என்றும், உலகின் முதல் டிஸ்யு கல்ச்சர் மகாபாரதத்தில் பிறந்த 100 கௌரவர்கள் இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படியான பதிலை எதிர்பார்த்து தான் கேள்விகளை கேட்டு இருப்பார்கள். அதை போய் கேலி செய்துவிட்டீர்களே அண்ணே......

    ReplyDelete