Sunday, December 17, 2017

கொலையாளியை காப்பாற்றுதா ராஜஸ்தான் போலீஸ்?




மதுரவாயல் ஆய்வாளர் திரு பெரியபாண்டியன் கொள்ளையர்களால் கொல்லப்படவில்லை. மற்றொரு  தமிழக காவல் ஆய்வாளர் திரு முனிசேகரை கொள்ளைக் கூட்டம் தாக்குகையில் அவர் கையில் இருந்த துப்பாக்கி வெடித்து அதில் இருந்த தோட்டா பெரியபாண்டியன் மீது பாய்ந்து அவர் இறந்து விட்டார். அவர் ஒன்றும் கொள்ளையர்களால் சுடப்படவில்லை என்று ராஜஸ்தான் போலீஸ் கூறியுள்ளது.

சம்பவம் நடந்து நான்கு நாட்களுப்பிறகு ஏன் இந்த திடீர் அறிக்கை?

கொள்ளையர்களோடு ராஜஸ்தான் போலீஸ் ஏதும் டீல் போட்டு விட்டதா?

இந்த சந்தேகம் வருவதற்கான காரணம் உண்டு.

ராஜஸ்தான் மாநிலத்தை ஆள்வது பாஜக.

எம்.பி யாகி பின்பு இணை அமைச்சராகி பிரதமர் மோடி பக்கத்திலேயே நிற்கும் ஒரு குற்றவாளியை 

"அவர் எங்கே உள்ளார் என்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்" 

என்று உயர்நீதி மன்றத்துக்கு அறிக்கை கொடுத்த உத்தமர்கள்தான் ராஜஸ்தான் மாநில காவல்துறையில் உள்ளார்கள்.

யப்பா! எடுபிடி எடப்பாடி வகையறாக்களா,

இறந்து போனது தமிழக காவல்துறை அதிகாரி.

இதிலும் உங்கள் அடிமை புத்தியை காண்பிக்காமல் ஒரிஜினல் குற்றவாளியை சட்டத்தின் முன்பு நிறுத்த நடவடிக்கை எடுங்கள். 

 

4 comments:

  1. as usual by evil commies, anything to be tied with Modi and BJP and always to be blamed.

    ReplyDelete
    Replies
    1. என்ன நாராயணசாமி நடராஜன் சார், எப்படி இருக்கீங்க?
      அனாமதேயமா ஒளிஞ்சு வரீங்க போல!

      பதில் சொல்ல முடியுமா கம்யூனிஸ்டுங்க மேல பழி போடறீங்க பாருங்க,
      அங்க நிக்கறீங்க, அபத்தமா.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. உண்மை கொலையாளியை தமிழக காவல்துறை காப்பாற்றுகிறது என்றும் கூறலாம்...

    ReplyDelete