Thursday, December 28, 2017

நகராவிட்டால் எதற்கய்யா இது வெட்டியாய்?




காட்பாடி ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுக்கள் (Escaloter) அமைக்கும் பணி தொடங்கிய நாள் முதல் அது செயல்பாட்டுக்கு வரும் நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு மேலே செல்வதற்கும் மட்டும்தான், கீழே இறங்குவதற்குக் கிடையாது என்று அறிந்த போது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சரி நமக்கான சிரமத்தில் பாதியாவது குறைகிறதே என்று ஒரு சின்ன ஆறுதல்.

அது செயல்பாட்டுக்கு வந்த பின்பு  நான்கைந்து முறை காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று வந்து விட்டேன். ஆனால் ஒரு முறை கூட அது வேலை செய்யவே இல்லை.

காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டும்தான் அது இயக்கப்படும் என்று சொல்கிறார்கள். பொதுவாக என் மகனை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலை 05.45 மணிக்கு புறப்படும் ரயிலில் ஏற்றிவிடச் செல்வேன். ரயில் கால தாமதமாக வரும் நாட்களில் கவனித்துள்ளேன். ஆறு மணிக்குப் பிறகும் அது இயங்குவதில்லை.

காட்பாடி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் பெரும்பாலானவை காலை ஆறு மணிக்கு முன்னாலும் மாலை ஆறு மணிக்கும் பின்னாலும் வருபவை. இடைப்பட்ட காலத்திலும் ரயில்கள் உண்டென்றாலும் அவர்கள் நகரும் படிக்கட்டுக்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் காலத்தில்தான் மிக அதிகம். பயணிகளும் அதிகம்.

நோயாளிகள் அதிகம் வருகிற ஒரு ரயில் நிலையம் காட்பாடி.  அனைத்து பிளாட்பார்ம்களிலும் இரு புறமும் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படக் கூடிய நகரும் படிக்கட்டுக்கள்தான் அவசியம். ரயில்வே நிர்வாகம் இதை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.

அப்படி இல்லாமல்  குறிப்பிட்ட நேரத்தில்  மட்டும் செயல்படுவடுவதில் எந்த பிரயோசனமும் கிடையாது.

“எங்க ஸ்டேஷனிலும் எலிவேட்டர் இருக்கு”  என்ற வெற்று பெருமிதம் மட்டுமே மிஞ்சும்.


6 comments:

  1. பில் செட்டில் ஆயிக்காது. உரியவர்களுக்கு உரியது சென்றிருக்காது.

    ReplyDelete
  2. இளஞ்செழியன் ராஜேந்திரன்December 28, 2017 at 11:17 AM

    சிறு திருத்தம்
    இது Escalator . elevator அல்ல


    ReplyDelete
  3. இப்படி தொடர்ச்சியாக நினைவூஞ்சலி பதிவு போட்டுக்கிட்டு இருந்தால் நான் எப்படி திட்டுவது
    உடனடியாக ஒரு அரசியல் பதிவு போடவும்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உயிரோடு இருக்கிறாயா?
      பைத்தியம் முற்றிப்போய் இறந்திருப்பாய் என்று நினைத்தேன்

      Delete
  4. Please do believe escalator/elevator/lift in any railway station (any government offices to some extent). Because of the poor maintenance you will be stuck up!!! Especially escalator should be avoided by kids and old.

    ReplyDelete