இங்கே
நம்முடைய மூத்த தோழர் ஜூடோ ரத்னம் அவர்கள் அமர்ந்துள்ளார். திரைப்படத்துறையில் நீண்ட
அனுபவம் உள்ளவர். திரைப்படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனிகாந்த், கமலஹாசன் என்று
பல கதாநாயகர்களை நாம் பார்த்துள்ளோம். சாதாரண மனிதர்களை விட அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்,
வலிமையானவர்கள் என்று காண்பிக்க அவர்கள் ஒரே ஆளாக, ஐம்பது பேரை அடித்து வீழ்த்துவது
போன்ற காட்சிகளை நம்முடைய ஜூடோ ரத்னம் போன்றவர்கள் அமைத்துக் கொடுப்பார்கள்.
வலிமையான
மனிதர்கள் போன்றதொரு பிம்பம் எப்படி கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களால் கட்டமைக்கப் படுகிறதோ, அப்படி
ஒரு பிம்பத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நரேந்திர மோடிக்கு கட்டமைத்தார்கள். குஜராத்தில்
நடைபெற்ற படுகொலைகளை மறக்கடித்து அங்கே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சித்தரித்தார்கள்.
அப்படி
உருவாக்கப்பட்ட பிம்பம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி
முடங்கிப் போயுள்ளது. வேலையின்மை பெருகியுள்ளது. இந்த பிரச்சினைகளுக்காக உழைப்பாளி
மக்கள் ஒன்றுபடக் கூடாது என்பதற்காக ஆட்சியாளர்கள் வகுப்புவாதத்தை தூண்டி விடுகின்றார்கள்.
வேலையின்மைக்கும் வறுமைக்கும் எதிராக போராட வேண்டிய இளைஞர்களை “பத்மாவதி” திரைபடத்திற்கு
எதிராக போராட வைப்பதெல்லாம் போலியாக கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பத்தை பாதுகாக்கும்
முயற்சியே.
No comments:
Post a Comment