Friday, December 22, 2017

விருது மகிழ்ச்சி, நிராகரித்தல் இன்னும் மகிழ்ச்சி




தோழர் இன்குலாபிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி. 

திராட்சை கிட்டாத நரிகள் புலம்பும் என்ற எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. மக்களின் பிரச்சினைகளை பாடியதால் அவர் எழுதுவது இலக்கியமே இல்லை, அழகியலே கிடையாது. லாபியிங் காரணமாகவே இந்த விருது என்றெல்லாம் அழுது விட்டார்கள். 

அதே நேரத்தில்

தோழர் இன்குலாப்  குடும்பத்தினர் அழுத்தமான வார்த்தைகளில் விருதை நிராகரித்தது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

அந்த அறிக்கை கீழே


சாகித்ய அகாடமி விருது ஏற்க மறுப்பு - இன்குலாப் குடும்பத்தினரின் அறிக்கை.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும்.அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம்.

இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது:

’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’


‘’அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.


….அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம். ‘’


இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபிற்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம்.இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார்.


அரசு முகங்கள் மாறலாம்.ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே.அடக்குமுறையும்,இனவாதமும்,வர்க்கபேதமும்,வன்முறையும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. 


விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்.இன்குலாப்பிற்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு.அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்.

இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை.

இறுதியாக இன்குலாபின் வரிகளில்

‘’விருதுகள் கௌவரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை…’’.


இவண்,
இன்குலாப் குடும்பத்தினர்.,
கமருன்னிஸா
சா.செல்வம்
சா.இன்குலாப்
சா.அமினா பர்வின்



ஆனால் காலமெல்லாம் இந்திய அரசெதிர்ப்பாளராக பாவனை செய்தவருக்கு அளிக்கப்படும் சாகித்ய அக்காதமி ஒருவகையில் அவர் ஒங்கிக் கூச்சலிட்ட அனைத்து புரட்சிகளையுமே காலிசெய்வது என்பதை அவருக்காக உழைத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது அவர்கள்தான் சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறார்களோ? அவர் ஏங்கியதே இதைத்தானோ?

என்று விஷத்தை கக்கிய இழிந்த குணம் கொண்ட ஜெயமோகனுக்கு இந்த தார்மீகம் எல்லாம் புரியாது.

தோழர் இன்குலாபின்  கொள்கைகளை உயர்த்திப் பிடித்ததால் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். 

பின் குறிப்பு : அருமையான இந்த ஓவியத்தை வரைந்தது தோழர் ஸ்ரீரசா.

பி.கு 2 : யதேச்சையாக நடந்த நிகழ்வொன்று பற்றி மாலையில் 


7 comments:

  1. அமரர்.இன்குலாப் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றேன்

    ReplyDelete
  2. வழமை போல் உன் பதிவுக்கு திட்டுகளை வழங்க முடியவில்லை
    மேலே சொன்ன வணக்கம் தான்

    ReplyDelete
  3. ஓ, அவனா நீ?
    தோழர் நல்லக்கண்ணுவையும் தோழர் பாலபாரதியையும் அன்றாடம்
    ஆபாசமாக பேசுகிற நீ, தோழர் இன்குலாபிற்கு மட்டும் வணக்கம் சொல்கிறாயா?
    உன்னைப் போன்ற கேடு கெட்டவர்கள் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்துவது அவருக்கு மரியாதை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. உன்னைப் போன்ற ஆபாசப் பேர்வழிகளுக்கு யாரைப் பற்றியும் பேச அருகதை கிடையாது. உனக்கெல்லாம் வாழவே கூட . . . . . . .

      Delete
    3. நான் மேலே போட்ட ஆபாசம் இல்லாத அந்த கமெண்ட் வெளியிடுவதில் என்ன தயக்கம் ?
      பயமா

      Delete
    4. பயமா? எனக்கா?
      உனக்கு பயம் இல்லாமல் இருந்தால் உன் அடையாளத்தோடு
      ஆபாசப் பின்னூட்டங்களை எழுது பார்ப்போம்.
      உன்னைப் போன்ற ஆபாசப் பேர்வழிகளுக்கு சமூகத்திலேயே
      இடம் தரக்கூடாது

      Delete