Tuesday, December 5, 2017

அழகென்று வேறெதை அழைப்பது?








மெல்லியதாய் பனி விழும்
அதிகாலை வேளையில்
வேகமாய் நகரும்
மேகக்கூட்டங்கள் மத்தியிலே
ஓளி வீசி மின்னும்
தூரத்து முழு நிலவை
கிட்டத்து இலைகள்
மறைப்பது போன்றதொரு
தோற்றப்பிழை.

இயற்கையின் எழிலை
அழகென்று சொல்லாமல்
வேறெப்படி அழைப்பது?

பி.கு : நேற்று அதிகாலை நாலரை மணிக்கு எடுத்த புகைப்படங்களும் அந்த நிமிடத்து உணர்வின் வெளிப்பாடும். 

2 comments: