Wednesday, December 4, 2013

உண்மை, முழுக்க முழுக்க உண்மை





கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 

கேமரா மொபைல் வந்த பின்பு இதுதான் யதார்த்த நிலை.

இது ஏதோ கோயில் புறப்பாட்டுக்கு என்று மட்டுமில்லை. திருமண நிகழ்வுகளின் போது கூட தாலி கட்டும் நேரத்தில் பலர் புகைப்படம் எடுப்பதை பார்க்கலாம். தொழில்முறை புகைப்படக்காரர்களுக்குக் கூட சில சமயம் இடம் கொடுக்க மாட்டார்கள்.

அதே போல அரசியல், தொழிற்சங்க மாநாடுகளில் கொடியேற்றும்போது கை உயர்த்தி முழக்கமிட வேண்டிய நேரத்தில் புகைப்படம் எடுக்கும் கைகள்தான் அதிகமாகி விட்டது.

இன்னும் இறுதி ஊர்வலத்திலும் அடக்கம், தகனத்திலும்தான் புகைப்படம் எடுக்காமல் இருக்கிறார்கள்.

5 comments:

  1. செல்பேசிகள் வந்த பின் கணனி வந்த பின் தாமே புகைப்படக்காரர்களாயும், தாமே புலனாய்வாளர்களாகவும், தாமே செய்தியாளர்களாவும், தாமே அனைத்துமாய் மாறிக் கிடக்கின்றனர் சில பல சமயங்களில் இது யதார்த்தம் மீறியும் அதீதத் தனமாயும் இருப்பதும் சிக்கலை உண்டாக்குவதாயும் இருந்துவிடுகின்றது..

    --- விவரணம். 

    ReplyDelete
  2. நானும் பார்த்திருக்கேன்.மொபையில் உள்ள கமராவை பாவித்து படம்பிடிக்கும் ஆசை தமிழகத்தில் ரொம்ப அதிகமாக தான் உள்ளது.கடவுளை கையெடுத்து வணங்கிய கைகள் இப்போ கடவுளை வணங்காம மொபைலை தூக்கி படம் பிடிங்கிறாங்க என்றால் கடவுள் அச்சம் குறைந்து விட்டதா?

    ReplyDelete
  3. even sometimes it is difficult to see the event because of these cameras!

    ReplyDelete
  4. உண்மைதான் எதைத்தான் படம் பிடிக்கிறது என்ற வரையறையே இல்லாமல் செய்கிறார்கள்.

    ReplyDelete