Sunday, December 8, 2013

முருகக் கடவுளையே புலம்ப வச்சுட்டாங்களே!



நேற்று மதுரையில் எங்கள் சங்கத்தின் சார்பில் பொதுத்துறை இன்சூரன்ஸ்  மாநில சிறப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாடு துவங்கும் முன் மதுரைக் கோட்டத்தின் சுடர் கலைக்குழுத் தோழர்கள் முருக விஜயம் என்று ஒரு நாடகம் நடத்தினார்கள். ஏழை பக்தனின் மகனை கல்லூரியில் சேர்க்க முருகனே வந்தாலும் கல்வி வள்ளல்கள் காசு வாங்காமல் விட மாட்டார்கள் என்று கல்வியில் காசு விளையாடுவதை சாடும் அந்த நாடகத்திலிருந்து சில வசனங்கள் கீழே.

 -----------------------------
பிரின்ஸிபால் : முருகா டீ, காபி ஏதாவது சாப்பிடறீயா? எங்க நீ பஞ்சாமிர்தம் மட்டும்தான் சாப்பிடுவ...

முருகன் : எங்க அபிஷேகம் பண்ணுவாங்க, அப்புறம் அப்படியே வழிச்சு எடுத்துட்டு போய் விடுவாங்க. நான் எப்போதும் பட்டினிதான்.
--------------------------------------------------------------------
முருகன்: ஏம்பா, நான் கடவுளே வந்திருக்கேன். என் கிட்டயே காசு கேட்கறீயே?

பிரின்சிபால் : நீ வந்ததால்தான் ஐம்பதாயிரம் ரூபாய். இல்லையென்றால் ஒரு லட்சம் ரூபாய்.

முருகன் : இப்படி பணம் இல்லாதவங்களை நடத்தலாமா?

பிரின்சிபால்: நீ மட்டும் என்ன முருகா செய்யற? பணக்காரங்களை
கர்ப்பக்கிரகம் வரைக்கும் அனுமதிக்கிற. ஏழைங்கள தர்ம தரிசனம்னு
தூரத்திலேயே அனுப்பிடறீயே
------------------------------------------------------------

பி.ஏ : என்ன முதலாளி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?

முதலாளி : பாலிடெக்னிக் கட்ட பர்மிஷன் கிடைச்சாச்சு. 

பி.ஏ : எங்க கட்டப் போறீங்க?

முதலாளி : என் வீட்டு மாட்டுத் தொழுவம்தான் இனிமே அருள் மிகு பழனியாண்டவர் பாலி டெக்னிக் காலேஜ்.

பி.ஏ : அப்ப மாட்டுத் தொழுவத்துக்கு பக்கத்துல இருக்கிற டாய்லெட்?

முதலாளி : அது இனிமே மகாத்மா காந்தி நர்சரி பள்ளி

----------------------------------------------------------
மந்திரி : மெடிகல் காலேஜுக்கு பர்மிஷன் கொடுக்க சி.எம் ரொம்ப
யோசிக்கிறார். உடனே வேணும்னா தொகை இன்னும் கொஞ்சம்
கூட ஆகும். மூணு சி.

முதலாளி : அவ்வளவா?

மந்திரி : காலேஜ் கட்டினவுடனே அது மாதிரி பல மடங்கு பாத்திட
மாட்டீங்க...

முதலாளி: சீக்கிரம் முடிச்சு கொடுங்க, உங்களையும் கவனிக்கிறேன்.

மந்திரி : எனக்கு எதுவும் வேண்டாம். உங்க அன்பே போதும். ஆனா எனக்கு தெரியும் உங்க அன்பை பணமாத்தான் வெளிப்படுத்துவீங்க.
----------------------------------------------------------------------------
முருகன் : நீ என் பக்தன் இல்லையா? என்னிடமே பணம் கேட்கறீயா?

மந்திரி : பணம் இல்லாம ஒன்னுமே செய்ய முடியாது முருகா? .நீ இன்னும் ஒரு தடவை உலகத்தை சுத்தி வா, அப்பதான் உனக்கு எல்லாம் புரியும்.

முருகன்: என்னிடம் பணம் இல்லையே...

மந்திரி : அறுபடை வீட்டில ஏதாவது ஒரு வீட்டோட பத்திரம் இருந்தா எடுத்துக்கிட்டு வா, அதை வச்சுக்கிட்டு சீட்டு தரேன்.

முருகன் : அப்பறம் ஐந்து படை வீடாக அது மாறிடும்.

மந்திரி : சரி உன் வேலைக் கொடு. தங்க வேல்தானே அது? ரொம்ப நாளா
எனக்கு அது மேல ஒரு கண்ணு

அவ்வளவுதான் முருகன் காணாமல் போய் விடுகிறார்.

5 comments:

  1. கல்வி வியாபாரிகள் முருகனையும் புலம்பவச்சிட்டாங்க.

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள வசனங்கள்தான்.

    ReplyDelete
  3. நாட்டு நடப்பை நல்லாவே தோலுரித்து காட்டியுள்ளனர். ஆனாலும் கல்விக் கடவுள்கள் திருந்தப் போவதில்லை

    ReplyDelete
  4. :)))))))) அழுவதா சிரிப்பதா புரியவில்லை .ஆனாலும் இந்த நாடகத்துக்கு
    இப்படி ஒரு கத வசனத்தைத் தயாரித்தவகளுக்கு வாழ்த்துச் சொல்லியேயாக வேண்டும் .நம்ம நாட்டு நடப்பை மிக அழகாக நடித்துக் காட்டியுள்ளார்கள் என்று புரிகிறது .அருமையான பகிர்வு .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. appadiye, Lord Jesus admission kettaa nalla irukkum.

    ReplyDelete